மெகாஸ்டார் சிரஞ்சீவி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காம்போவில் ஒரு படம் வரவிருப்பதாக தகவல் வெளியாகி காட்டுத்தீ போல் வைரலாக பரவி வருகிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தங்களின் கடின உழைப்பால் முன்னேறி இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த இருவரின் காம்போவில் ஒரு படம் வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனிடையே ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் வதந்திகள் பரவுகின்றன. அதற்குள் நண்பர் கமல்ஹாசனுடன் ஒரு மல்டிஸ்டாரர் படத்தில் நடிக்க திட்டமிட்டு உள்ளார். அது மட்டுமின்றி, கமல் தயாரிப்பிலும் ஒரு படம் நடிக்கிறார்.
24
சிரஞ்சீவி உடன் நடிக்கும் ரஜினி
சிரஞ்சீவி தற்போது இயக்குனர் பாபி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த புதிய படத்தில் ரஜினிகாந்த்தை ஒரு பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் பரவி வருகிறது. இயக்குனர் பாபி, ரஜினிகாந்திற்காக சுமார் 30 நிமிட சிறப்பு கதாபாத்திரத்தை எழுதியுள்ளாராம். இது கதையை திருப்பும் முக்கிய பாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
34
பாபி இயக்கத்தில் ரஜினி
சமீபத்தில் வெளியான கூலி படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், ரஜினிகாந்த் ஒரு நல்ல வெற்றிக்காக காத்திருக்கிறார். தற்போது அவரது முழு நம்பிக்கையும் ஜெயிலர் 2 மீது உள்ளது. பாபி போன்ற கமர்ஷியல் இயக்குனர் இந்த இரு சூப்பர் ஸ்டார்களையும் சமமாக காட்டுவாரா, கதையை எப்படி பேலன்ஸ் செய்வார் என்பது பெரிய கேள்வி. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறாது. இப்படத்தை முடித்த பின்னர் கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினி. அப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்து அவர் விலகியதால், அவருக்கு பதில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.