சில ‘நாய்’யால சீக்காளி ஆனேன் - இயக்குனர் ஷங்கரை சீண்டினாரா வடிவேலு?... சர்ச்சையை கிளப்பிய அப்பத்தா பாடல்

Published : Nov 15, 2022, 08:34 AM ISTUpdated : Nov 15, 2022, 08:55 AM IST

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இடம்பெறும் அப்பத்தா பாடலில் இயக்குனர் ஷங்கரை சீண்டும் வகையில் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.

PREV
14
சில ‘நாய்’யால சீக்காளி ஆனேன் - இயக்குனர் ஷங்கரை சீண்டினாரா வடிவேலு?... சர்ச்சையை கிளப்பிய அப்பத்தா பாடல்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த வடிவேலு, கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்துவிட்டு பாதியிலேயே வெளியேறியதன் காரணமாக ஷங்கர் அவர்மீது புகார் கொடுத்திருந்தார். ஷங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

24

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்த ரெட் கார்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதையடுத்து மீண்டும் சினிமாவில் பிசியாகிவிட்டார் வடிவேலு. தற்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... விஜய் டிவி 'குக் வித் கோமாளி' ரித்திகாவுக்கு திருமணம்..! அட மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்!

34

இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அப்பத்தா என பெயரிடப்பட்டு உள்ள அப்பாடலை வடிவேலு தான் பாடி இருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த இப்பாடலுக்கு அசல் கோளார் பாடல் வரிகளை எழுதி இருந்தார். இப்பாடலுக்கு நடன இயக்குனர் பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார்.

44

வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த இப்பாடல் யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இப்பாடல் வரிகள் சர்ச்சையில் சிக்கி உள்ளன. அதன்படி இதில் இடம்பெறும் “நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்தேன்... சில ‘நாய்’யால நான் சீக்காளி ஆனேன்” என்கிற வரிகள் தான் இந்த சர்ச்சைக்கு காரணம். இயக்குனர் ஷங்கர் உடனான பிரச்சனையால் தான் அவர் நடிக்க முடியாமல் போனது என்பது ஊருக்கே தெரியும். அப்படி இருக்கையில் அவரை வம்பிழுக்கும் வகையில் தான் இப்படி ஒரு வரியை அப்பாடலில் வைத்துள்ளதாக நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கவர்ச்சிக்கு தாவிய பிக்பாஸ் லாஸ்லியா! பாவாடை தாவணியில்... ஒல்லி பெல்லி இடுப்பை வளையவளைய காட்டி ஹாட் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories