தாய் இறந்த இரண்டே மாதத்தில் தந்தை மரணம்... சோகத்தில் மகேஷ் பாபு - ஆறுதல் கூறும் ரசிகர்கள்

Published : Nov 15, 2022, 07:37 AM IST

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், மூத்த தெலுங்கு நடிகருமான சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79.

PREV
15
தாய் இறந்த இரண்டே மாதத்தில் தந்தை மரணம்... சோகத்தில் மகேஷ் பாபு - ஆறுதல் கூறும் ரசிகர்கள்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தை கிருஷ்ணாவும் டோலிவுட்டில் மூத்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கோலோச்சியவர் ஆவார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த கிருஷ்ணாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது அவருக்கு லேசான மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.

25

இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஐசியுவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காததால் அவர் இன்று அதிகாலை மரணமடைந்தார். தந்தையின் மரணத்தால் சோகத்தில் மூழ்கிய நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

35

இந்த ஆண்டு மகேஷ் பாபுவுக்கு மிகவும் சோகமான ஆண்டாகவே அமைந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு ஜனவரியில் அவரின் அண்ணன் ரமேஷ் மரணமடைந்தார். கடந்த செப்டம்பர் மாதம் இவரது தாயார் இந்திராதேவி இறந்தார். இதுதவிர அவருக்கு மிக நெருக்கமாக இருந்த பி.ஏ.ராஜூவின் இழப்பும் மகேஷ் பாபுவுக்கு பேரிழப்பாக அமைந்தது.

இதையும் படியுங்கள்... மூன்றே நாட்களில் இத்தனை கோடி வசூலா..! பாக்ஸ் ஆபிஸில் லவ் டுடேவிற்கு டஃப் கொடுக்கும் சமந்தாவின் யசோதா

45

தெலுங்கு திரையுலகில் பல்வேறு புதிய விஷயங்களையும், தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தி அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கிருஷ்ணா. குறிப்பாக தெலுங்கில் முதல் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை உருவாக்கியதும் (குடாச்சாரி 116) இவர்தான், அதுமட்டுமின்றி டோலிவுட்டின் முதல் கௌபாய் திரைப்படத்தை (மொசகல்லக்கு மொசகாடு) தயாரித்த பெருமையும் இவரையே சேரும். 

55

இவர் நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி இருக்கின்றன. மெட்ராஸில் 100 நாட்களைக் கடந்து ஓடிய முதல் தெலுங்குப் படம் கிருஷ்ணா நடித்த 'சிகட்டி வெலுகுலு' என்கிற திரைப்படம் தான். அதேபோல் இவரின் 'அல்லூரி சீதாராமராஜு', திரைப்படம் ஐதராபாத்தில் ஓராண்டு ஓடி சாதனை படைத்தது. இதுதவிர பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்த சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும், தெலுங்கு திரையுலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அட்லி செயலால் ஆத்திரம் அடைந்த ஷாருக்கான்... எச்சரித்தாரா? என்ன பிரச்சனை... வெளியான லேட்டஸ்ட் தகவல்!

click me!

Recommended Stories