இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து, தன்னுடைய முதல் படமான 'ராஜா ராணி' படத்திலேய அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில், என அடுத்தடுத்து தளபதி விஜய்யை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
தற்போது கோலிவுட் திரையுலகை தாண்டி, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அவ்வப்போது இந்த படம் குறித்து சில சர்ச்சைகளும் வந்து செல்கிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன் அட்லி இயக்கி வரும் 'ஜவான்' படத்தின் கதை, கடந்த 2006 ஆம் ஆண்டு ரோஜா காம்பைஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'பேரரசு' படத்தின் கதையை ஒற்று இருப்பதாக செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் என்பவர் தயாரிப்பாளர் சங்கத்தின் பரபரப்பு புகார் கொடுத்தார்.
கவர்ச்சிக்கு தாவிய பிக்பாஸ் லாஸ்லியா! பாவாடை தாவணியில்... ஒல்லி பெல்லி இடுப்பை வளையவளைய காட்டி ஹாட் போட்டோஸ்!
மேலும் இதுகுறித்து இந்த படத்தின் உரிமையை பெற்று வைத்திருக்கும் மாணிக்கம் நாராயணன் மற்றும் அட்லி ஆகிய இருவரிடமும், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.
இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கி வரும், 'ஜவான்' படத்தை ஷாருக்கானின் பட நிறுவனம் தான் தற்போது தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு குறிப்பிடப்பட்ட தொகையை விட, அட்லி அதிகமாகவே செலவு செய்து வருகிறாராரம். ஆன் ஸ்கிரீன் மட்டும் இன்றி ஆப் ஸ்கிரீனில் ஏகப்பட்ட செலவுகளை இழுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.