இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முதல் முதலில் இவருக்கு தான் ரசிகர்கள் ஆர்மியை துவங்கி தங்களுடைய ஆதரவை தெரிவிக்க ஆரம்பித்தனர். இவர் உள்ளே இருக்கும்போது ஏகப்பட்ட வரவேற்பு இவருக்கு இருந்த நிலையில், திடீரென நடிகர் கவின் மீது காதல் கொண்டு பிக்பாஸ் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் இவருக்கான ஓட்டுக்களும் குறைய துவங்கியது.
ஐசரி கணேஷின் அடுத்த படத்தில் ஹீரோவான ஹிப் ஹாப் தமிழா!
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஃப்ரீஸ் டாஸ்கின் போது, லாஸ்லியாவின் தாய், தந்தை, தங்கைகள் வந்து சென்ற போது, இவர் அவர்களின் நம்பிக்கையை கெடுக்கும் படி நடந்து கொண்டதாக திட்டியதால் சில எதிர்பாராத திருப்புமுனைகளும் நிகழ்ச்சியில் நடந்தது.
இதன் மூலம் பிக்பாஸ் ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பு லாஸ்லியாவுக்கு கிடைத்தது. எனினும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், லாஸ்லியா கவினை விட்டு விலக துவங்கினார். இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ஏற்பட்ட காதலை இதுவரை வெளிப்படையாக கூறியது இல்லை.