கைப்புள்ளையுடன் மீண்டும் கைகோர்க்கும் சுந்தர் சி - வெளியான தரமான காமெடி காம்போ அப்டேட்!

Ansgar R |  
Published : Sep 11, 2024, 11:55 PM IST

Vadivelu Sundar C : பிரபல நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் அடுத்த திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது.

PREV
14
கைப்புள்ளையுடன் மீண்டும் கைகோர்க்கும் சுந்தர் சி - வெளியான தரமான காமெடி காம்போ அப்டேட்!
Murai Maman Movie

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, "வாழ்க்கைச் சக்கரம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் சுந்தர் சி. அதன்பிறகு கடந்த 1995ம் ஆண்டு தமிழில் வெளியான "முறைமாமன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், எழுத்தாளராகவும் இவர் தமிழ் திரையுலகில் களம் இறங்கினார். ஜெயராம் மற்றும் கவுண்டமணி நடிப்பில் மெகா ஹிட்டான அந்த திரைப்படம் மூலம் தான் குஷ்பூ மற்றும் சுந்தர் சி-யிடையே காதல் மலர்ந்தது.

அந்த கேரக்டரா? நோ வே.. கோட் பட மைக் மோகன் கதாபாத்திரம் - ரிஜெக்ட் செய்த இரு டாப் ஹீரோஸ்!

24
Winner Movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு "அருணாச்சலம்", உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஒரு "அன்பே சிவம்" என்று தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களை வைத்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த சுந்தர் சி, முதல் முதலாக பிரபல நடிகர் வடிவேலுவுடன் இணைந்த திரைப்படம் தான் "வின்னர்". கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படத்தின் காமெடி காட்சிகள் சுமார் 21 ஆண்டுகள் கழித்தும் இப்போதும் பெரிய அளவில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

34
Thalainagaram

"வின்னர்" திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக "கிரி", "லண்டன்", "ரெண்டு" மற்றும் "தலைநகரம்" உள்ளிட்ட திரைப்படங்களில் வடிவேலுவுடன் இணைந்து பயணித்த சுந்தர் சி, ஒரு மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது வடிவேலுவுடன் ஒரு திரைப்படத்தில் இணையவிருக்கிறார். மேலும் அந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாளை ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

44
Gangers

இருப்பினும் தற்பொழுது வெளியாகி உள்ள சில தகவல்களின்படி வடிவேலு மற்றும் சுந்தர் சி இணையும் அந்த திரைப்படத்தின் பெயர் "கேங்கர்ஸ்" என்றும், ஏற்கனவே அப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 50 சதவீதத்திற்கும் மேல் முடிந்துவிட்டது என்றும் தகவல்கள் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்று பிரத்தியேகமாக அந்த படத்தின் போஸ்டரையும் இப்போது வெளியிட்டுள்ளது. மாறுபட்ட லுக்கில் மீண்டும் வைப்புயல் கலக்க வரப்போகிறார் என்பது அந்த போஸ்டர் மூலம் நிரூபணமாகியுள்ளது.

டிசைன் டிசைனா அட்வைஸ்.. ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசுனு பஞ்ச் பேசும் விஜய் சேதுபதி - பிக் பாஸ் புதிய ப்ரோமோ!

Read more Photos on
click me!

Recommended Stories