அந்த கேரக்டரா? நோ வே.. கோட் பட மைக் மோகன் கதாபாத்திரம் - ரிஜெக்ட் செய்த இரு டாப் ஹீரோஸ்!

First Published | Sep 11, 2024, 10:27 PM IST

GOAT Movie Mic Mohan Role : கோட் பட மிக் மோகன் கதாபாத்திரத்தில் நடிக்க தான் அணுகிய இரு சூப்பர் நடிகர்கள் பற்றி பேசியுள்ளார் வெங்கட் பிரபு.

Nayanthara

வெங்கட் பிரபு 

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி உலக அளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்து வருகிறது தளபதி விஜயின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம்". இரு வெவ்வேறு கதாபாத்திரங்களில் தளபதி விஜய் நேர்த்தியாக நடிக்க வைத்து மீண்டும் தான் ஒரு கமர்சியல் கிங் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. பல சுவாரசியமான திருப்புமுனைகளோடு உருவாக்கப்பட்டுள்ள கோட் திரைப்படம் ஆறு நாட்களைக் கடந்து தற்போது வெற்றிகரமாக பயணித்து வருகின்றது. 

இந்நிலையில் தொடர்ச்சியாக பல பேட்டிகளில் பங்கேற்று கோட் திரைப்படத்தில் தான் பணியாற்றியது குறித்து பற்பல சுவாரசியமான சம்பவங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஏற்கனவே நடிகை சினேகா கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த நயன்தாரா பற்றி பேசிய வெங்கட் பிரபு, இப்பொது மைக் மோகன் கதாபாத்திரம் குறித்து, அதற்கு அவர் அணுகிய நடிகர்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

சென்னையில் வெடிக்கும் குண்டு.. சர்ச்சையை கிளப்பும் ஹிப்ஹாப் ஆதி - கடைசி உலகப்போர் ட்ரைலர் இதோ!

Madhavan and Aravind Swamy

மைக் மோகன் 

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், கேப்டன் விஜயகாந்த் என்று பல முன்னணி நடிகர்கள் மெகா ஹிட்டாகி வந்த காலத்திலேயே, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தோடு பயணித்து வந்த சூப்பர் ஹிட் ஹீரோ தான் மைக் மோகன். 80களின் இறுதியில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்த அவர், ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். 

இந்த சூழலில் தற்பொழுது தனது திரையுலக பயணத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பயணிக்க தொடங்கியுள்ளார். தளபதியின் கோட் திரைப்படத்தில் வில்லனாக அவர் நடித்த கதாபாத்திரத்தில், நடிக்க பிரபல நடிகர் மாதவன் மற்றும் பிரபல நடிகர் அரவிந்த்சாமி ஆகிய இருவரையும் அணுகியதாகவும், ஆனால் அவர்கள் வேறு திரைப்படங்களில் பிஸியாக இருந்த காரணத்தினால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது என்று கூறியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Tap to resize

Vijay TVK

தளபதி விஜய் 

தனது அறுபத்தி எட்டாவது திரைப்படமாக "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்த படியாக தனது 69வது திரைப்பட பணிகளை துவங்க உள்ளார். அதற்கு முன்னதாக விக்கிரவாண்டியில் நடைபெறும் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை இந்த மாத இறுதியில் அவர் நடத்த உள்ளார். சுமார் ஒரு லட்சம் பேர் வரை இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த மாநாட்டில் சிறுவர்கள் யாரும் கட்டாயம் பங்கு பெற கூடாது என்றும், மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெரியவர்கள் தங்களோடு அவர்களுடைய குழந்தையை அழைத்து வரக்கூடாது என்றும் திட்டவட்டமாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த கட்சி மாநாட்டை முடிக்கும் தளபதி விஜய், உடனடியாக தனது 69வது திரைப்பட பணிகளை துவங்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

thalapathy 69

தளபதி 69

பிரபல இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் தளபதியின் 69வது மற்றும் கலை உலகில் இறுதி திரைப்படம் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் ஹெச் வினோத் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து, அரசியல் சம்பந்தப்பட்ட திரைப்படம் ஒன்றை இயக்குவதாக இருந்தது. 

உலக நாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே அந்த திரைப்படத்தை தயாரிக்கும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. இந்த சூழலில் தான் முன்னறிவிப்புகள் ஏதுமின்றி, அந்த திரைப்படம் கைவிடப்பட்ட நிலையில், உலக நாயகன் கமல்ஹாசனுக்காக எழுதிய அந்த கதையை தான் இப்போது தளபதி விஜய்க்கு வினோத் பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

'கோட் ' படத்தில் சினேகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வெங்கட் பிரபு கூறிய தகவல்!

Latest Videos

click me!