செல்வராகவன் ஆண்ட்ரியா வீடியோ - எண்டே இல்லாமல் சர்ச்சைகளை கிளப்பி வரும் சுசித்ரா!

First Published | Sep 11, 2024, 8:32 PM IST

Suchitra About Selvaraghavan and Andrea : பிரபல பாடகி சுசித்ரா எண்டே இல்லாமல் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

Suchi Leaks

சுச்சி லீக்ஸ் 

கடந்த 2017ம் ஆண்டு, அதாவது பிரபல பாடகி சுசித்ரா தனது கலை உலக பயணத்திலிருந்து ஓய்வு பெற்றதற்கு அடுத்த ஆண்டு என்றே கூறலாம். அப்போது "சுச்சி லீக்ஸ்" என்ற தலைப்பில் நடிகர் தனுஷ், திரிஷா, ரானா தகுபதி, ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை அமலா பால் என்று பலரது சர்ச்சையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கோலிவுட் திரை உலகை ஆட்டம் காண வைத்தார் சுசித்ரா. அப்போது சர்ச்சைகளின் நாயகியாக மாறிய அவர் இந்த ஏழு ஆண்டுகளில் பல பரபரப்பான விஷயங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

திரைத்துறை என்பது ஒரு மாய உலகம் என்பார்கள், அதற்கு ஏற்றார் போல எப்போது அங்கு என்ன நடக்கும் என்பது எல்லாமே மாயம் தான். தனிமனிதர்கள் மட்டுமல்ல, சினிமா பிரபலங்கள் என்று வரும்போது கூட அவர்களுடைய சொந்த வாழக்கை என்பது தனிநபர் விஷயமாகவே பார்க்கப்பட வேண்டும் என்பதே பலரின் பொதுவான கருத்து. அந்த ஒரு விஷயத்தில் தான் சுசித்ராவிற்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்க துவங்கினர்.

ஆட்டிப்படைக்கும் ஆர்த்தியின் குடும்பம்.. JRன் டிவோர்ஸ் முடிவுக்கு "இதுவே" காரணம் - பொங்கும் நெட்டிசன்ஸ்!

Karthick Kumar

கணவரை பிரிந்த சுசித்ரா 

இந்த சுசி லீக்ஸ் வெளியான அதே 2017ம் ஆண்டு தான் தனது கணவர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்தார் பிரபல பாடகி சுசித்ரா. சுமார் 12 ஆண்டுகள் கார்த்திக் குமாருடன் வாழ்ந்து வந்த சுசித்ரா, அவரை திருமணம் செய்த சில ஆண்டுகளிலேயே அவர் ஒரு ஓரினசேர்கையாளர் என்று தான் தெரிந்து கொண்டதாகவும், ஆனால் அதன் பிறகு இரு வீட்டாரின் கட்டாயத்தாலேயே 12 ஆண்டுகள் அவரோடு இணைந்து வாழ்ந்ததாகவும் பரபரப்பான ஒரு விஷயத்தை கூறினார்.

அது மட்டுமல்லாமல் நடிகர் தனுஷ் மற்றும் தனது கணவர் கார்த்திக் குமார் ஆகிய இருவரையும் இணைத்து பல விஷயங்களை அவர் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. கார்த்திக் குமார் தனது பாலினம் குறித்து மறைப்பதாகவும், அதை ஏன் அவர் பகிரங்கமாக வெளியில் சொல்லக்கூடாது என்றும் கேள்விகளை எழுப்பினார். பின்னர் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் அதற்கு பதில் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Sonia Agarwal

இயக்குனர் செல்வராகவன் 

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிக நேர்த்தியான, தனது ரசிகர்களால் மிகவும் மதிக்கப்படுகிற ஒரு இயக்குனர் தான் செல்வராகவன். இன்று நடிகர் தனுஷ் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்து இருக்கிறார் என்றால், அதற்கு முழுமுதற் காரணம் அவருடைய அண்ணன் செல்வராகவன் தான் என்றால் அது யாராலும் மறுக்கப்பட முடியாத ஒரு உண்மை. செல்வராகவனுக்கு கடந்த 2006ம் ஆண்டு பிரபல நடிகை சோனியா அகர்வால் உடன் திருமணம் நடந்து முடிந்தது. 

ஆனால் சுமார் 4 ஆண்டுகள் கழித்து கடந்த 2010ம் ஆண்டு சோனியா அகர்வாலை இயக்குனர் செல்வராகவன் விவாகரத்து செய்தார். இந்த சூழலில் தான் செல்வராகவன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் நடித்த நடிகை ஆண்ட்ரியாவிற்கும், செல்வராகவனுக்கு நட்பு இருப்பதாக கூறி கிசுகிசுக்கள் எழுந்தன. மேலும் அதன் காரணமாகத்தான் சோனியா அகர்வால் செல்வராகவனை விவாகரத்து செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த விஷயம் பெரிய அளவில் பேசப்படாத நிலையில், 2011ம் ஆண்டு கீதாஞ்சலி என்கின்ற பெண்ணை செல்வராகவன் திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Actress Andrea

செல்வராகவன் ஆண்ட்ரியா வீடியோ 

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் தனுஷ் தன்னை பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்ததாகவும், ஒரு குறும்படம் குறித்து தன்னிடம் பேச விரும்பியதாகவும் கூறியிருக்கிறார் சுசித்ரா. தனுஷ் எனக்கு தம்பி மாதிரி தான், மிக மிக நல்ல பையன், ஆனால் என் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலரோடு இணைந்து தான் இப்போது தனுஷ் கெட்டுப் போயிருக்கிறார் என்று சுசித்ரா கூறியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் அந்த இடத்திற்கு சென்ற தன்னிடம் செல்வராகவன் மற்றும் ஆண்ட்ரியா இணைந்திருக்கும் வீடியோ ஒன்று தங்கள் வசம் இருப்பதாகவும் சிலர் கூறியதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இதெல்லாம் சினிமாவுக்காக செய்யப்படும் விஷயங்கள் என்று அதை நான் பொறுப்பெடுத்தாமல் அதைப்பற்றி பேசாமல் திரும்பி விட்டேன் என்று கூறியிருக்கிறார். இத்தனை ஆண்டு காலம் பேசப்படாமல் இருந்த செல்வராகவன் மற்றும் ஆண்ட்ரியா இடையான உறவு குறித்து தற்பொழுது மீண்டும் சர்ச்சைகள் கிளம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சத்தமில்லாமல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு நிதியை அள்ளி கொடுத்த சிம்பு!

Latest Videos

click me!