சத்தமில்லாமல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு நிதியை அள்ளி கொடுத்த சிம்பு!

Published : Sep 11, 2024, 06:26 PM IST

ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள பாதிப்புக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு, நடிகர் சிம்பு சைலண்டாக ரூ.6 லட்சம் வழங்கியுள்ளார்.  

PREV
14
சத்தமில்லாமல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு நிதியை அள்ளி கொடுத்த சிம்பு!
Simbu

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. விஜயவாடா, கர்ணூல் போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், ஏராளமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டும் இன்றி, மிகப்பெரிய அளவில் பொருள் சேதமும் ஏற்பட்டது. மக்களில் இரு சக்கர வாகனங்கள், உடமைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. குடிசையில் வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
 

24
Simbu Donate

வெள்ளை நீர் பல வீடுகளின் உள்ளே புகுந்ததோடு... விஷ பூச்சிகளும் அழையா விருந்தாளிகளாக வந்து குழந்தைகள் மற்றும் வயதானோரை அச்சுறுத்தியது. அதே போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்சார வசதியும் தடை செய்யப்பட்டது. வெள்ளப்பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பொருட்டு, பல பிரபலங்கள் தானாக முன்வந்து, தங்களால் முடிந்த நிதி உதவியை முதல்வரின் நிவாரணத்திற்கு கொடுத்து வருகிறார்கள்.
 

34
Simbu

அந்த வகையில் நடிகர் ஜூனியர் என்டிஆர், ரூபாய். 50 லட்சம் நிதி உதவி வழங்கிய நிலையில், அல்லு அர்ஜுன் தெலுங்கானா வெள்ள பாதிப்புக்காக ரூபாய் 1.கோடி ரூபாய் வழங்கினார். அதேபோல் சிரஞ்சீவி, பிரபாஸ், ஆகியோர் தலா ரூ.1 கோடி ரூபாய் வழங்கிய நிலையில், மகேஷ் பாபு 50 லட்சம் பணம் வழங்கினார். ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண் ரூ.6 கோடி வெள்ள பாதிப்புக்காக வழங்கினார்.
 

44
Actor Simbu

இவர்களை தொடர்ந்து தற்போது பிரபல நடிகர் சிம்பு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள பாதிப்புக்காக ரூபாய் 6 லட்சம் ரூபாய் முதல்வரின் நிதிக்கு வழங்கி உள்ளார்.  நடிகர் சிம்புவுக்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆனால் தெலுங்கானா மாற்று ஆந்திராவில் அதிக ஃபேன்  பேஸ் உள்ள நடிகர்களே இதுவரை எந்த ஒரு நிதியும் வழங்காத நிலையில், தற்போது சிம்பு ரூபாய் 6 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். தற்போது சிம்பு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தக்கலைப் மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ் டி ஆர் 48 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories