குடும்பத்தோடு காரில் சென்றபோது விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா! ஆத்திரத்தில் அசிங்கமாக பேசியதால் பரபரப்பு!

First Published | Sep 11, 2024, 4:47 PM IST

நடிகர் ஜீவா தன்னுடைய குடும்பத்தினருடன் சேலத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, கள்ளக்குறிச்சி அருகே ஜீவாவின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Actor Jiiva

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் ஆர் பி சவுத்திரியின் இரண்டாவது மகனான ஜீவா, தமிழ் சினிமாவில் அணைத்து தரப்பு ரசிகர்களாலும் நன்கு அறியப்பட்ட பிரபலமாக உள்ளார். தயாரிப்பாளரின் மகன் என்பதால், குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. 

Jiiva Movies

இதை தொடர்ந்து, 2003-ஆம் ஆண்டு, 'ஆசை ஆசையாய்' என்கிற  திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். முதல் படமே, இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து தித்திக்குதே, ராம், டிஸ்யூம், பொறி, முகமூடி, உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஜீவா ஆரம்பத்தில்... தொடர்ந்து சில காதல் கதைகளில் நடித்தாலும், பின்னர் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். ஆனால் கடந்த சில வருடங்களாக ஜீவா நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. 

Tap to resize

Jiiva Upcoming Movies

கடந்த ஆண்டு வெங்கட் பிரபு நடிப்பில் நாக சைதன்யா நடித்திருந்த 'கஸ்டடி' படத்தில் கேமியோ ரோலில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் இந்த ஆண்டு,  தெலுங்கில் இவர் நடித்துள்ள யாத்ரா 2, மற்றும் தமிழில் மேதாவி, கண்ணப்பா என மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. 

Jiiva Car Met Accident:

தற்போது நடிகர் ஜீவாவின் குடும்பம், விபத்தில் சிக்கியுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜீவா, தன்னுடைய குடும்பத்தினருடன்... சேலத்தில் இருந்து கார் மூலம் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் பகுதி அருகே இவருடைய கார் விபத்தில் சிக்கி உள்ளது. குறுக்கே பைக் வந்ததால், சாலையின் தடுப்பு சுவரில் மோதி இவருடைய கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. ஜீவாவின் கார் முன்பகுதி பலத்த சேதம் அடைந்த நிலையில் இவருடைய குடும்பத்தினரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

Jiiva Controversy:

இந்த விபத்தின் காரணமாக, சாலைகளில் மக்கள் கூடி விட்டனர். ஒரு நபர் ஏதாவது உதவி வேண்டுமா? என்கிற நோக்கத்தில் ஜீவாவிடம் என்ன ஆச்சு என கேட்க, அதற்க்கு ஜீவா ஆத்திரத்தில் அவரை திட்டியுள்ளார். இது அங்கிருநந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது. ஏற்க்கனவே... கடந்த வாரம் தேனியில் நடந்த கடை திறப்பு விழா ஒன்றில், கலந்து கொண்ட ஜீவாவிடம் ஹேமா அறிக்கை குறித்தும், தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பதாக கூறப்படுவது பற்றியும் செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், "உனக்கு அறிவு இருக்கா... என சீறிக்கொண்டு சண்டைக்கு பாய்ந்தது பராபர்ப்பக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!