நடிகர் சிம்பு
தமிழ் திரையுலகை பொருத்தவரை தனது முதலாவது வயது முதல் நடித்து வரும் நடிகர் தான் சிம்பு. நடனம், இசை, இயக்கம் மற்றும் நடிப்பு என்று பல்வேறு திறமைகள் அவரிடம் இருக்கும் அதே நேரம், திரை துறையை பொருத்தவரை பல சர்ச்சைகளிலும் சிக்கிய நாயகனாக திகழ்ந்து வருகிறார் நடிகர் சிம்பு. நடிகை நயன்தாராவுடன், பிரபுதேவாவுக்கு அடுத்தபடியாக பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கியவர் சிம்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் ஷூட்டிங்கிற்கு மிகவும் லேட்டாக வருவது, சொன்ன தேதியில் படத்தை முடித்துக் கொடுக்காமல் இருப்பது போன்ற பல பிரச்சனைகள் அவரை சுற்றி கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் பிரபல வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வழங்க இருந்த, "கொரோனா குமார்" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ஒப்பந்தமானார். ஆனால் மூன்று ஆண்டுகளை கடந்தும் அந்த திரைப்படத்தில் நடிக்காமலும், அதே நேரத்தில் அந்தப் படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி தராமல் இருந்து வந்தார் என்று கூறப்பட்டது.
மேலும் அவர் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் வேல்ஸ் நிறுவனம் புகார் அளித்தது, இதனை அடுத்து அவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க அவருக்கு தடையும் விதிக்கப்பட்டது. இந்த சூழலில் தான் அண்மையில் வேல்ஸ் நிறுவனத்திற்கும், சிம்புவிற்கும் இடையே சமரசம் செய்யப்பட்டு, விரைவில் அந்த திரைப்படத்தில் அவர் நடித்துக் கொடுக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியானது.