
தமிழில் கடந்த 2003-ஆம் ஆண்டு தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கிய 'ஜெயம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரவி. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் இவருடைய அடையாளமாக ஜெயம் என்கிற சொல் மாறியதை தொடர்ந்து 'ஜெயம் ரவி' என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இவருடைய பெயரில் ஜெயம் என்கிற வார்த்தை இணைந்ததால் என்னவோ.... இவர் அடுத்தது நடித்த படங்கள் அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக வளர்ந்த ஜெயம் ரவி, கடந்த 2009-ஆம் ஆண்டு தன்னுடைய காதலி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆர்த்தியை ஜெயம் ரவி முதல் முதலில் தன்னுடைய கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சியில் தான் சந்தித்தார். பின்னர் ஆர்த்தியை துரத்தி துரத்தி காதலித்து தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தினார். இருவரும் 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி எப்படி ஒரு சினிமா பின்புலம் கொண்டவரே... அதே போல் ஆர்த்தியும் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண் தான். இவரது தயார் சுஜாதா விஜயகுமார், சன் டிவியில் ஒளிபரப்பான ஏராளமான சீரியல்களை தயாரித்துள்ளார். அதே போல் ஜெயம் ரவி நடித்த சில படங்களையும் தயாரித்துள்ளார்.
மாடியில் இருந்து குதித்து பிரபல நடிகையின் தந்தை தற்கொலை! காரணம் என்ன?
கடந்த 6 மாதங்களாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே சில பிரச்சனைகள் புகைந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டது. ஆர்த்தி தன்னுடைய கணவருடன் எடுத்து கொண்ட அணைத்து புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி அதிர்ச்சி கொடுத்தார். அதே நேரம்... இருவருமே விவாகரத்து குறித்து வெளியான செய்திகளுக்கும் தொடர்ந்து மௌனம் சாதித்து வந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி, நேற்று முன்தினம் தானாக முன்வந்து... தன்னுடைய விவாகரத்து முடிவை அறிவித்தார். ஜெயம் ரவி - ஆர்த்தியின் விவாகரத்து சம்பவம் கோலிவுட் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் பல சினிமா விமர்சகர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறி வந்தனர்.
ஜெயம் ரவியின் அறிக்கையில், இந்த முடிவு எளிதில் எடுக்கப்பட்டது இல்லை என்றும், பல்வேறு யோசனைகளுக்கு பின்னரே எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். அதே போல் தன்னை சார்ந்திருப்பவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என அறிவித்திருந்ததால்... ஆர்த்தியால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு இதன் காரணமாக கூட ஜெயம் ரவி இப்படி பட்ட முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்பட்டது. சினிமா விமர்சகர்களும் ஏற்கனவே நடந்த பிரச்சனை, மற்றும் ஆர்த்தியின் நடவடிக்கைகள் தான் ஜெயம் ரவி இப்படிப்பட்ட முடிவை எடுக்க காரணம் என கூறினர். ஆர்த்தி தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படாத நிலையில், நேற்றைய தினம் ஜெயம் ரவி தானாக முன்வந்து குடும்ப நல நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்தார்.
இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருக்கும் போதே தேம்பி தேம்பி அழுத ஜானகி! எந்த பாட்டுக்கு தெரியுமா?
தற்போது ஆர்த்தி ஜெயம் ரவி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பல உண்மைகளை அம்பலப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை அவரது வலி மற்றும் வேதனையில் நிறைந்துள்ளதை பார்க்க முடிகிறது. இந்த அறிக்கையில் குறிப்பாக இந்த விஷயங்களை நீங்கள் நோட் பண்ணுனீங்களா?
ஆர்த்தி தன்னுடைய கணவர் மீதும் இப்போதும் காதலுடன் இருப்பதை தெரிவிக்கும் விதத்தில், அறிக்கையில் AR (ஆர்த்தி ரவி) என்றே பதிவிட்டிருந்தார். கணவர் ரவியின் பெயரை தன்னுடைய பெயரில் இருந்து நீக்கவில்லை.
அதே போல், "ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும், மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்". என்று கூறி இருந்ததன் மூலம் ஜெயம் ரவி தன்னிச்சையாக தன்னுடைய மனைவியின் எந்த விதமான ஒப்புதலும் இல்லாமல் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது தெரிகிறது.
ஜெயம் ரவியின் முகத்திரையை கிழித்த ஆர்த்தி; ஆர்த்தியின் கடிதத்தில் புதைந்து இருக்கும் மர்மங்கள்!!
இந்த அறிக்கையில் ஆர்த்தி "பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை... இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்". என மனவேதனையோடு அறிவித்துள்ளார். காதலித்த போது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் ஒரு மனைவியாக... அவருடன் வாழ்ந்த வாழ்க்கை மற்றும் அவருடைய 2 பிள்ளைகளை சுமந்து, அவர்களுக்காக பட்ட கஷ்டம் மற்றும் வலி வேதனைகளை ஜெயா ரவி அசிங்கப்படுத்தி விட்டதாக உணர்வதை அறிவித்துள்ளார்.
அதே போல் "என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீப காலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது." என ஆர்த்தி கூறுவதில் இருந்து ஆர்த்தி ஜெயம் ரவியை சந்தித்து, தங்களுக்குள் இருக்கும் பிரச்சனையை பேசி முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுத்த போதும்... அது ஜெயம் ரவியாலோ.. அல்லது அவருடன் இருந்தவர்களாலோ தடுக்கப்பட்டதை சுட்டி காட்டியுள்ளார்.
ஆர்த்தியின் இந்த அறிக்கையில் "நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர, குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல." என கூறியுள்ளதால்... ஜெயம் ரவி பிளான் போட்டு தான் இப்படி ஒரு விஷயத்தை செய்துள்ளாரா? என்கிற சந்தேகத்தை எழுப்புவது மட்டும் இன்றி, இதனால் இவர்களின் குழந்தைகளும் தந்தை ஏன் இப்படி செய்கிறார் என்கிற குழப்பமான மனநிலையில் உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
"பொதுவெளியில் இந்த சம்பவம் குறித்து பேசுவதற்கு விருப்பம் இல்லை என்றாலும்.. ஜெயம் ரவிக்கு ஆதரவாக தன்னை மிகவும் தாழ்த்தி ... என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை எதிர் கொள்ள வேண்டி உள்ளதால் இந்த அறிக்கையை வெளியிடுவதையும் அறிவித்துள்ளார்.
ராதிகாவிடமே பல கோடி பணத்தை ஆட்டையை போட்டவர் விஜயகாந்த்! பிரபலம் கூறிய ஷாக் தகவல்!
தன்னுடைய குழந்தைகள் குறித்து ஆர்த்தி குறிப்பிட்டுள்ளதாவது, "ஒரு தாயாக எனக்கு எப்போதும் என் குழந்தைகளின் நலனும் எதிர்காலமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால், இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. ஆர்த்தி இதுவரை விவாகரத்து குறித்து பேசாமல் இருந்த போதே... விமர்சனம் என்கிற பெயரில் பலர் சேற்றை வாரி விரைந்தனர். ஒருவேளை இதற்கும் பதில் கொடுக்காவிட்டால்... காலப்போக்கில் இதுவே உண்மையாகவும் மாற வாய்ப்புண்டு என்கிற பயத்துடன் பதில் கொடுத்துள்ளார்.
தன்னுடைய பிள்ளைகளுக்கு தைரியம் கொடுக்கும் நேரத்தில் இருப்பதாக கூறியுள்ள ஆர்த்தி
"காலம், நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். என கூறியுள்ளார். இதன் மூலம் ஆர்த்தி ஜெயம் ரவி மீதான சில தவறுகளை மறைத்து தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.