மாடியில் இருந்து குதித்து பிரபல நடிகையின் தந்தை தற்கொலை! காரணம் என்ன?

Published : Sep 11, 2024, 01:37 PM ISTUpdated : Sep 11, 2024, 01:48 PM IST

பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை, அனில் அரோரா இன்று காலை மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

PREV
14
மாடியில் இருந்து குதித்து பிரபல நடிகையின் தந்தை தற்கொலை! காரணம் என்ன?
Malaika Arora

பாலிவுட் நடிகியும், மாடலுமான மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா...  (செப்டம்பர் 11ஆம் தேதி) அதாவது இன்று காலை அவர் தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்து குறித்து  தற்கொலை செய்து கொண்டார். தற்போது இவரின் உடலை கைப்பற்றிய போலீசார், தற்கொலைக்கான பின்னணி குறித்து விரிவாக விசாரணை செய்து வருகின்றனர்.
 

24
Malaika Arora father suicide

தற்போது இவரது தற்கொலை குறித்து வெளியாகியுள்ள தகவலில், மலைகா அரோராவின் பெற்றோர், அனில் அரோரா மற்றும் ஜாய்ஸ் பாலிகார்ப் ஆகியோர், பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள ஆயிஷா மேனரில் வசித்து வந்தனர். இந்நிலையில் காலை 9 மணியளவில் அவர் தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

34
Anil Arora Death

மேலும் இவருடைய உடல், பாபா மருத்துவமணியாக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனில் அரோராவின் திடீர் மரணத்திற்கான பின்னணி குறித்து தற்போது வரை எந்த காரணமும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது. 
 

44
Anil Arora Death Reason

மலாக்கா அரோராவின் தாயார் ஜாய்ஸ் பாலிகார்ப் ஒரு மலையாளி கிறிஸ்தவர், அதே சமயம் அவரது தந்தை அனில் அரோரா, இந்திய எல்லைக்கு அருகில் உள்ள ஃபசில்கா என்ற நகரத்தைச் சேர்ந்த பஞ்சாபி இந்து, இந்திய வணிகக் கடற்படையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்து 
 

Read more Photos on
click me!

Recommended Stories