நடிகர் கமல்ஹாசனின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை ருசித்த படம் என்றால் அது தேவர் மகன் தான். இப்படம் கடந்த 1992-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் வெற்றியை ருசித்தது. இப்படத்தை பரதன் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை கமல்ஹாசன் எழுதி இருந்ததாக படத்தில் குறிப்பிட்டு இருந்தனர். தமிழ் சினிமாவில் படம் எடுக்க வருபவர்களுக்கு அப்படம் ஒரு விக்கிப்பீடியாவாக திகழ்ந்து வருகிறது.
தேவர்மகன் படத்தின் கதையை தான் 7 நாட்களில் எழுதி முடித்துவிட்டதாக கமல்ஹாசனே பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார். இப்படி அவர் உரிமை கொண்டாடும் இந்தக் கதை அவருடையது இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆனால் அதுதான் நிஜம் என்றும் கூறப்படுகிறது.