
ஜெயம் ரவி விவாகரத்து
பிரபல நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக வெளியிட்ட தகவல்கள் தான் இப்பொது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை தரமான நல்ல பல திரைப்படங்களை கொடுத்து அசத்தி வரும் நடிகர் தான் ஜெயம் ரவி. அவருக்கென்று தனியே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து தனது கணவர் ரவியின் புகைப்படங்களை நீக்கியதாக சில தகவல்கள் வெளியானது.
அதைத் தொடர்ந்து விரைவில் அவர்களுக்கு விவாகரத்து நடைபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவியது. ஆனால் ஊடகங்களில் பரவிய அந்த செய்திக்கு மறுப்போ? அல்லது ஆதரவோ? ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்லை. இந்த சூழலில் தான் நேற்று முன்தினம் பரபரப்பு அறிக்கை ஒன்றை ஜெயம் ரவி வெளியிட்டார். அதில் கடந்த 15 ஆண்டுகளாக தனது மனைவியுடன் வாழ்ந்து வரும் நிலையில், இப்பொழுது தனது குடும்ப சூழல் கருதி அவரை பிரிய உள்ளதாக அறிவித்திருந்தார்.
அவர் வெளியிட்ட இந்த அறிவிப்பு திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அழகிய இந்த ஜோடியின் பிரிவுக்கு காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது.
சத்தமில்லாமல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு நிதியை அள்ளி கொடுத்த சிம்பு!
மனு கொடுத்த ஜெயம் ரவி
பொதுவாக பிரபலங்கள், அதிலும் குறிப்பாக திரை பிரபலங்கள் விவாகரத்து பெற உள்ள நிலையில், கணவன் மற்றும் மனைவி என்று இருவர் தரப்பில் இருந்தும் அறிக்கைகள் வெளியாகும். ஆனால் ஜெயம் ரவியின் விவாகரத்து விஷயத்தை பொறுத்த வரை, நேற்று முன்தினம் அவர் மட்டும் தான், தனது மனைவியை பிரிய உள்ளதாக ஒரு பதிவினை வெளியிட்டார். அது மட்டும் அல்லாமல் அந்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு குடும்ப நல நீதிமன்றத்தை நாடிய ஜெயம் ரவி ஒரு மனுவையும் அளித்தார்.
அதில் "கடந்த 2009ம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணத்தை ரத்து செய்ய வேண்டியும், தனது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து அளிக்க வேண்டும் என்று கூறியும் ஒரு மனுவை அளித்திருந்தார். ஆனால் அந்த மனுவானது அக்டோபர் மாதம் 10ஆம் தேதி தான் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி அளித்த அந்த மனுவின் மீதான விசாரணைக்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் இன்று அவரது மனைவி ஆர்த்தி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பி இருக்கிறார்.
ஆர்த்தியின் அறிக்கை
ஆர்த்தி ரவி என்று தன் கணவரின் பெயரை இணைத்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆர்த்தி, "கடந்த சில நாட்களாக வெளியாகும் விஷயங்களும், தனது கணவர் வெளியிட்ட அறிக்கையும் தனக்கு மிகுந்த மன வேதனையையும் கவலையையும் அளிக்கிறது" என்று கூறியிருக்கிறார். தன்னுடைய கவனத்திற்கு வராமலேயே தன்னுடைய ஒப்புதல் பெறாமலேயே இந்த முடிவை ரவி எடுத்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக மரியாதையுடனும், பரஸ்பர அன்புடனும் நாங்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கை, அவர் வெளியிட்ட இந்த ஒரே அறிக்கையின் மூலம் அதற்கு இருந்த அனைத்து மரியாதையையும் இழந்து விட்டதாக ஆர்த்தி கூறியிருக்கிறார்.
அவருக்காக வாழ்ந்து இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து, இவர்களுக்காக பட்ட வலிகளையும் வேதனைகளையும் ஜெயம் ரவி அசிங்கப்படுத்தி விட்டதாக தான் உணர்வதாக பேசி இருக்கிறார். மேலும் இது குறித்து ஜெயம் ரவியிடம் பேச அவரை சந்திக்க கடந்த சில வாரங்களாகவே முயற்சி செய்து வருகிறேன், ஆனால் அதற்கு எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட வருகிறது என்றும் ஆர்த்தி ரவி கூறி இருக்கிறார். தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை எடுத்த பொழுது அது ஜெயம் ரவியாலோ, அல்லது அவருடன் உள்ளவர்களாலோ தடுக்கப்பட்டது என்றும் பேசி இருக்கிறார் ஆர்த்தி.
நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் அறிக்கைகள் இப்படி வெளியான நிலையில் ஜெயம் ரவியின் ரசிகர்கள் இணையத்தில் விவாதித்து வரும் விஷயங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஜெயம் ரவி பொறுத்தவரை அவர் திரை உலகிலும், அதற்கு பின்னாலும் மிகச்சிறந்த மனிதர். ஆனால் அவருடைய மனைவியின் தரப்பில் இருந்து திரைப்பட ரீதியாக அவருக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுக்கப்படுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
ஜெயம் ரவியை காட்டிலும் மூன்று மடங்கு மிகப்பெரிய பணக்காரர் ஆர்த்தி, ஸ்விட்சர்லாந்தில் சந்தித்து ஜெயம் ரவி மீது காதல் கொண்டு தான், கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி அவரை திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தியின் அம்மா மிகப்பெரிய தயாரிப்பாளர், ஒரு சில திரைப்படங்களையும் பல சின்னத்திரை நாடகங்களையும் தொடர்ச்சியாக தயாரித்து வருகிறார். அதேபோல அவருடைய தந்தையும் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார்.
ஆகவே ஆர்த்தியின் குடும்பத்தாரின் தலையீடு ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் இருப்பதாலும், தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று ஜெயம் ரவி எண்ணியதாலும் தான் இப்போது இந்த விவாகரத்து முடிவை அவர் எடுத்துள்ளதாக ஜெயம் ரவியின் ரசிகர்கள் பரவலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.