
'மங்காத்தா' படத்திற்காக அஜித் - வெங்கட் பிரபு கூட்டணி வைத்த போதே... எப்போது, விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி வைப்பார்கள் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏராளம். இதே கேள்வியை சிலமுறை வெங்கட் பிரபுவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, கண்டிப்பாக விஜய்யுடன் படம் பண்ணுவேன் என கூறி இருந்தார். ஒருவழியாக தளபதியின் 68-ஆவது படத்தை கைப்பற்ற பல இயக்குனர்கள் போட்டி போட்டபோது சத்தமில்லாமல் தளபதி பட வாய்ப்பை தட்டி தூக்கினார் வெங்கட் பிரபு. அதாவது ரஜினி - தனுஷை வைத்து முதலில் இயக்க பிளான் போட்ட , இயக்குனர் வெங்கட் பிரபு, ஐஸ்வர்யா - தனுஷ் விவாகரத்து சம்பவத்துக்கு பின்னர், அதற்க்கு வாய்ப்பில்லை என்றதும்... எதார்த்தமாக இந்த டபுள் ஆக்ஷன் ஸ்டோரியை தளபதியிடம் கூற, குஷியான விஜய் எப்போ ஷூட்டிங் போகலாம் என கேட்டு வெங்கட் பிரபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
தளபதி படம் என்றதும், இந்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை AGS நிறுவனம் கைப்பற்றியது. மேலும் இந்த படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளம் கொடுத்தது மட்டும் இன்றி, படத்தை தயாரிக்கவும் 200 கோடி செலவு செய்யப்பட்டது. படம் வெளியாகும் முன்பே லாபத்தை பெற்று தந்துவிட்டதாக அர்ச்சனா கல்பாத்தி கூறி இருந்த நிலையில், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியான 'கோட்' படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இரட்டை வேடத்தில் நடித்துள்ள நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். அதுமட்டுமின்றி தளபதி மிகவும் போல்டான நெகட்டிக் ஷேடிலும் நடித்திருந்தார். அப்பா - மகன் என இரண்டு விஜய்க்கும் இடையேயான மோதலை மையமாக வைத்து, இந்த படத்தை இயக்கி இருந்தார் தளபதி. குறிப்பாக இப்படத்தின் கிளைமேக்ஸ் சற்றும் யூகிக்க முடியாத விதத்தில் இருந்தது தான் இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் என கூறப்பட்டது. இந்த படத்தின் திரைக்கதையை வெங்கட் பிரபு கையாண்ட விதம் தான் இப்படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.
கடந்த 6 நாட்களில் சுமார் 350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள இந்த படத்தில், விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா, அஜமல், பிரேம்ஜி, விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. தமிழில் மட்டும் சுமார் 100 கோடி வசூலை எட்டியுள்ள கோட் திரைப்படம், 500 கோடி வசூலுக்கு மேல் செய்யும் நாளை எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருக்கின்றனர் தளபதி ரசிகர்கள். தமிழில் மட்டும் இன்றி , தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பக்கா பிளான் போட்டு மனைவியை கழற்றி விட்ட ஜெயம் ரவி, அடுக்கடுக்கான புகார்களை குவித்த ஆர்த்தி!!
இந்நிலையில் இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவலைகளை வெளியிட்டு வரும் வெங்கட் பிரபு, இந்த படத்தில் சினேகாவுக்கு முன் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க இருந்தார் என்கிற தகவல் கூறியுள்ளார். அதாவது, சினேகாவுக்கு முன்பு தளபதியின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நயன்தாராவை தான் அணுகினாராம் வெங்கட் பிரபு. அவரிடம் கதையை கூறி ஒப்புதல் வாங்கிய பின்னர் சில காரணங்களால் நயன்தாராவால் 'கோட்' படத்தில் நடிக்க முடியாமல் போக, சினேகாவை நடிக்க வைத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் கோட் படத்தை பார்த்து விட்டு, நடிகை நயன்தாரா தனக்கு போன் செய்ததாகவும்... தன்னை நீங்கள் அணுகிய கதாபாத்திரத்திற்கு சினேகா தான் மிகவும் பொருத்தமானவர், அவரது நடிக்கும் மிகவும் அருமையாக இருந்தது. என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கும் சொல்லி விடுங்கள் என கூறியுள்ளார். நயன்தாராவின் இந்த குணம் மிகவும் தனித்துவமானது என தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார் வெங்கட் பிரபு.
இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருக்கும் போதே தேம்பி தேம்பி அழுத ஜானகி! எந்த பாட்டுக்கு தெரியுமா?