மாரி செல்வராஜுக்கு கமல் மீது அப்படி என்ன கோபம்? பரியேறும் பெருமாள் தொடங்கி வாழை வரை தொடரும் உரசல்

First Published | Aug 31, 2024, 8:50 AM IST

பரியேறும் பெருமாள் படம் தொடங்கி வாழை படம் வரை கமல்ஹாசனை மாரி செல்வராஜ் விமர்சிப்பது தொடர்கதை ஆகி வருகிறது.

Mari Selvaraj vs Kamalhaasan

பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் மாரி செல்வராஜ். அவர் கமல்ஹாசனை விமர்சிப்பது தொடர்கதை ஆகி வருகிறது. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த வாழை படத்தில் கூட கமல், ரஜினி ரசிகர்களாக இரு சிறுவர்களை காட்டியுள்ள அவர் அதில் ரஜினியையே உயர்வாக காட்டி இருப்பார். கமல் ரசிகனை ஒரு காமெடி பீஸ் போலவே சித்தரிக்கும் வகையில் அதில் உள்ள வசனங்கள் இடம்பெற்றிருக்கும்.

Mari Selvaraj

ஆனால் மாரி செல்வராஜ் இப்படி கமலை விமர்சிப்பது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் அவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியபோதே, கமலின் தேவர்மகன் படத்தை கடுமையாக விமர்சித்து ஒரு கடிதம் எழுதி இருந்தார். கமலஹாசனுக்கு ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம் என தொடங்கும் அந்த கடிதத்தில் மிஸ்டர் களவானி காமன்மேன் என கமல்ஹாசனை டார் டாராக கிழித்து எழுதி இருந்தார் மாரி செல்வராஜ்.

Tap to resize

Mari Selvaraj says about Kamalhaasan

அதோடு நிறுத்தவில்லை பரியேறும் பெருமாள் ரிலீஸ் ஆன சமயத்தில் கமல்ஹாசனின் பாபநாசம் படத்தை விமர்சித்து ஒரு மேடையில் பேசி இருந்தார் மாரி செல்வராஜ். அதில் பாபநாசம் படத்தில் கமல் தன் மகளை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பாரே தவிர, உன்னிடம் தவறாக நடந்தது அவன் தான் நீ ஏன் பயப்படனும்னு ஒரு இடத்தில் கூட சொல்லமாட்டார். அது ஏன் என்று கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பினார் அதுவும் சர்ச்சை ஆனது.

இதையும் படியுங்கள்... கமலை விமர்சித்து மாரி செல்வராஜ் எழுதிய காட்டமான கடிதம் இதோ

Director Mari Selvaraj

கமல்ஹாசனை அதுவரை மறைமுகமாக தாக்கி பேசி வந்த மாரி செல்வராஜ், மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கமல்ஹாசனை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து அவர் முன்னிலையிலேயே அவரது தேவர் மகன் படத்தை விமர்சித்தார். அப்படம் தனக்கு மனப்பிறழ்வை ஏற்படுத்தியதாகவும், தான் மாமன்னன் எடுத்ததற்கு தேவர் மகன் தான் காரணம் என்றும் பேசி இருந்தார். தமிழ் சினிமாவில் சாதிவெறியை ஏற்படுத்திய படம் தேவர்மகன் என்பது போல் அந்த ஆடியோ லாஞ்சில் பேசி இருந்தார் மாரி. அவர் தன்னை விமர்சித்தாலும், இன்முகத்தோடு அமர்ந்திருந்த கமல், இறுதியில் அவரை பாராட்டி பேசிவிட்டு அங்கிருந்து சென்றார்.

Vaazhai Movie Director Mari Selvaraj

தற்போது வாழை படத்தில் ஒரு படி மேலே சென்று படத்திலேயே கமலை மட்டம் தட்டும் வகையிலான வசனங்களை வைத்து இருக்கிறார் மாரி செல்வராஜ். இது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் என்றும் அவர் சொல்லி இருப்பதால், உண்மையிலேயே கமல் மீது சிறு வயதில் இருந்தே கோபத்தில் இருந்திருக்கிறார் மாரி செல்வராஜ் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. மாரி செல்வராஜ் தன்னை தொடர்ந்து தாக்கி வருவதால் தான் கமல் இதுவரை வாழை படத்தை வாழ்த்த மனமின்றி இருக்கிறாரோ என்கிற கேள்வியும் எழுகிறது. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே அழைத்து வாழை படம் பார்க்க வைத்த மாரி செல்வராஜ், கமல்ஹாசனிடம் அப்படத்தை காட்டாதது ஏன் என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது. 

இதையும் படியுங்கள்... Vaazhai:ஒரே டிராக்கில் செல்லும் மாரி செல்வராஜ் - வாழை படத்தின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்ய ரகசியம்!

Latest Videos

click me!