1 நிமிட விளம்பரத்துக்கு 1 கோடி; ரசிகர்களை விட எனக்கு பணம் முக்கியமில்லைனு உதறித்தள்ளிய அஜித்!!

First Published | Aug 31, 2024, 7:40 AM IST

நடிகர் அஜித் குமாரை விளம்பரத்தில் நடிக்க வைக்க ஒரு கோடி சம்பளம் கொடுத்தும் அவர் நடிக்கவே மாட்டேன் என சொல்லிவிட்டாராம் அதைப்பற்றி பார்க்கலாம்.

Ajithkumar

தமிழ் சினிமாவில் எந்தவித பின்புலமும் இன்றி அறிமுகமாகி, தன்னுடைய சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர் அஜித்குமார். அவருக்கென தற்போது தனி ரசிகர் படையே உள்ளது. மற்ற நடிகர்களைப் போல் மீடியா வெளிச்சத்தை விரும்பாத நடிகராக இருக்கும் அஜித், பொது நிகழ்ச்சிகள், பட விழாக்கள், ஆடியோ லாஞ்ச் போன்றவற்றில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார். தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என கலைத்தாலும் அவருக்கான ரசிகர்கள் மட்டும் குறையவே இல்லை.

Thala Ajith

சினிமா நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுவதால் அவர் படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து நன்கு சம்பாதித்து வருகின்றனர். சினிமாவை காட்டிலும் விளம்பரம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நடிகர், நடிகைகளும் இருக்கின்றனர். குறிப்பாக பாலிவுட்டில் காசுக்காக விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் ஏராளம். கோடிக்கணக்கில் பணம் கிடைப்பதனால் குட்கா விளம்பரத்தில் கூட முன்னணி இந்தி நடிகர்கள் போட்டிபோட்டு நடிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... அட்ரா சக்க... நடித்து சம்பாதித்த பணத்தில் புது பிஸ்னஸை துவங்கிய மைனா நந்தினி! குவியும் வாழ்த்து!

Tap to resize

Ajith Refused to act in Ad

ஆனால் தமிழ் சினிமா நடிகர்கள் அதில் கெட்டிக்காரர்கள். மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சம்பந்தமான விளம்பரத்தில் தமிழ் நடிகர்கள் நடிப்பதில்லை. அதிலும் ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் விளம்பரங்களில் தலைகாட்டுவதே இல்லை. இந்த நிலையில், நடிகர் அஜித் தனது ரசிகர்களின் நலன் கருதி ஒரு விளம்பரத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். அதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒரு கோடி சம்பளம் தர முன்வந்தும் அஜித் நோ சொல்லிவிட்டாராம்.

Ajith Rejected 1 Crore salary

அது வேறெதுவுமில்லை பெப்சி விளம்பரம் தான். அஜித் ஜி படத்தில் நடித்தபோது கொஞ்சம் நிதி நெருக்கடியில் இருந்து வந்தாராம். அந்த சமயத்தில் குளிர்பான விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. ஒரு நிமிட விளம்பரத்தில் நடிக்க ஒரு கோடிவரை சம்பளம் பேசி இருக்கிறார்கள். ஆனால் அஜித் நடிக்க மறுத்துவிட்டாராம். அவரிடம் ஏன் மறுத்தீர்கள் என கேட்டதற்கு, நான் அந்த குளிர்பானத்தை குடிச்சதே இல்ல, அப்படி இருக்கும்போது அதில் நடிச்சா என் ரசிகர்களும் அதைப் பார்த்து குடிப்பார்கள். எனக்கு என் ரசிகர்களை விட பணம் முக்கியமில்லை என சொன்னாராம் அஜித். இந்த தங்கமான மனசு யாருக்கு வரும்.

இதையும் படியுங்கள்... என்னது 2028ஆ.. இதெல்லாம் ஞாயமா? கல்கி 2898 AD பற்றிய அறிவிப்பு - அப்செட்டில் ரசிகர்கள்!

Latest Videos

click me!