"பிளாக்".. ஓர் இரவில் நடக்கும் Sci-Fi கதை - மீண்டும் கோலிவுட்டில் கம் பேக் கொடுப்பாரா ஜீவா?

Actor Jiiva : தமிழ் திரை உலகில் ஜனரஞ்சகமான பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த நடிகர் ஜீவா இப்போது மீண்டும் தமிழ் திரை உலகில் கம் பேக் கொடுக்க உள்ளார்.

Ram Movie

தமிழ் சினிமா மட்டுமல்லாமல், இந்திய சினிமா உலகத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் தான் சூப்பர் குட் ஃபிலிம்ஸ். அந்த நிறுவனத்தின் தலைவர் தான் ஆர்.பி சவுத்ரி. அவருடத இளைய மகன் தான் பிரபல நடிகர் ஜீவா, குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்து தனது கலை பயணத்தை துவங்கினார்.

அட்ரா சக்க... நடித்து சம்பாதித்த பணத்தில் புது பிஸ்னஸை துவங்கிய மைனா நந்தினி! குவியும் வாழ்த்து!

Actor Jiiva

அதன்பிறகு கடந்த 2003ம் ஆண்டு தமிழில் வெளியான "ஆசை ஆசையாய்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் திரை உலகில் களமிறங்கிய ஜீவாவிற்கு "ராம்", "டிஷ்யூம்", "கற்றது தமிழ்" மற்றும் "சிவா மனசுல சக்தி" போன்ற பல திரைப்படங்கள் மெகா ஹிட் திரைப்படங்களாக மாறியது. ஜீவா மெல்ல மெல்ல உச்ச நட்சத்திரமாக மாறினார். 


kollywood actor jiiva

காமெடி, ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் என்று எந்த வகையான திரைக்கதையாக இருந்தாலும் அதில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வந்த நடிகர் ஜீவா, கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் ஹிட் திரைப்படங்களை கொடுக்கவில்லை. இறுதியாக தமிழில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான "வரலாறு முக்கியம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Priya Bhavani Shankar

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் தமிழ் திரை உலகில் களமிறங்கவுள்ள ஜீவா, "பிளாக்" என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பிரபல நடிகை பிரியா பவானி அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ள நிலையில், இது ஒரே ஒரு நாள் இரவில் நடக்கும் சயின்ஸ் பிக்ஷன் கதையாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நிச்சயம் ஜீவாவிற்கு இது ஒரு கம்பேக் திரைப்படமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

என்னது 2028ஆ.. இதெல்லாம் ஞாயமா? கல்கி 2898 AD பற்றிய அறிவிப்பு - அப்செட்டில் ரசிகர்கள்!

Latest Videos

click me!