நடிகை மைனா நந்தினி தற்போது சினிமா - வெப் சீரிஸ் என படு பிசியாக நடித்து வரும் நிலையில், புதிய பிஸ்னஸ் ஒன்றையும் துவங்கி உள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அவர் வெளியிட வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
திரையுலக வாழ்க்கையில் மட்டும் அல்ல.. நிஜ வாழ்க்கையிலும் பல போராட்டங்களை கடந்து, தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தால், இன்று சினிமாவில் நிலையான இடத்தை பிடித்திருப்பவர் தான் மைனா நந்தினி.
27
Myna Nandhini Shine in Cinema
இவர் நடிகையாக அறிமுகமாக வேண்டும் என்கிற ஆசையில் வாய்ப்பு தேடியபோது... வாய்ப்பு கொடுத்தவர்களை விட நிராகரித்தவர்கள் தான் அதிகம். அதற்க்கு முக்கிய காரணம் இவரின் நிறம். கருப்பாக இருக்கும் பெண்களுக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காது என்கிற பேச்சை மாற்றி... தனக்கான ஒரு வாய்ப்பை கண்டுபிடித்தார். இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் வெளியான 'வெண்ணிலா கபடி' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார் மைனா நந்தினி.
இதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ், அருள்நிதியை வைத்து இயக்கிய வம்சம், திரைப்படத்தின் மூலம் இவரது முகம் ரசிகர்கள் மத்தியில் பரிச்சியமான நிலையில், சினிமா வாய்ப்பு எதிர்பார்த்த அளவுக்கு கிடைத்தாகத்தால், சீரியலில் தன்னுடைய கவனத்தை திருப்பினார்.
47
Saravanan Meenakshi serial
அந்த வகையில்... அழகி, அமுதா ஒரு ஆச்சர்யக்குறி, மருதாணி போன்ற சீரியல்களில் இவர் நடித்தாலும், மைனா நந்தினியின் நடிப்பை தனித்துவமாக காட்டியது விஜய் டிவியில் இவர் நடித்த சரவணன் மீனாட்சி தொடர் தான். இதில் நடிகை ரக்ஷிதாவின் தோழியாக... காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதை தொடர்ந்து தன்னுடைய சினிமா கேரியரில் ஏறுமுகத்தை சந்தித்த மைனா நந்தினி வாழ்க்கையில் பூகம்பத்தையே ஏற்படுத்தியது இவரது திருமண வாழ்க்கை. கார்த்திகேயன் என்பவரை காதலித்து இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில், சில மாதங்களிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்திற்கு காரணம் மைனா தான் என பலர் இவர் மீது வார்த்தைகளை வீசி மனதை நோகடித்தனர்.
67
Myna Nandhini getting Second marriage to Yogeshwaran
சில மாதங்கள், சினிமா.. சீரியல் என எதிலும் தலைகாட்டாமல் இருந்த மைனா பின்னர் மெல்ல மெல்ல தன்னுடைய வழக்கமான பணிகளை மேற்கொண்டார். தன்னுடைய மோசமான வாழ்க்கையின் நினைவுகளில் இருந்து வெளியேறி, சீரியல் நடிகர் யோகேஸ்வரனை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் தற்போது இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார்.
77
Myna started new saree business
மைனா நந்தினி தற்போது திரைப்படங்களில் காமெடி கலந்த ரோல் மற்றும் வெப் சீரீஸ்களில் நடித்து வரும் நிலையில், புதிய தொழில் ஒன்றை துவங்கியுள்ளார். அதாவது பொன்னூசல் என்கிற புடவை வியாபாரத்தை துவங்கியுள்ளார். இதற்கான புரோமோஷனிலும் இவரே ஈடுபடுகிறார். இதுகுறித்த அறிவிப்பை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மைனா நந்தினி வெளியிட இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.