சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. 'வேட்டையன்' படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் இணைந்து நடித்து வருகிறார் தலைவர்.
24
Actor Nagarjuna as Simon in Coolie
இதற்கு முன் தளபதி விஜய்யை வைத்து 'மாஸ்டர்' மற்றும் 'லியோ' என இரண்டு ஹிட் படங்களையும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு 'விக்ரம்' என்கிற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தையும் இயக்கிய லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் அடுத்தடுத்து வெளியே ஆகி வரும் நிலையில், ஏற்கனவே இப்படத்தில் நடிக்கும் 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சௌபின் ஷாகிர் தயால் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து 'சிமோன்' என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.
44
Shruthihaasan as Preethi in Coolie
இன்றைய தினம் நடிகை ஸ்ருதிஹாசனின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்கிற கதாபாத்திரத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். கையில் ஆயுதம் ஒன்றை வைத்தபடி படி, கண்ணில் பயத்தோடு... கலைந்த முடி, நெற்றியில் பொட்டு என சல்வாரில் எளிமையான தோற்றத்தில் உள்ளார். தினமும் கூலி பட நடிகர்கள் பற்றி வெளியாகி வரும் அறிவிப்புகள் இப்படம் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.