தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற பிப்ரவரி 15-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாக உள்ள படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழில் இந்த வாரம் இரண்டு திரைப்படம் ரிலீசாக உள்ளன. ஒன்று தனுஷின் வாத்தி. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருக்கிறார். தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் ரிலீசாகும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார்.
25
மற்றொரு தமிழ் படம் பகாசூரன். திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி இப்படத்தை இயக்கி உள்ளார். பகாசூரன் திரைப்படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்திருக்கிறார். அதேபோல் நட்டி நட்ராஜ் இதில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். இப்படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி ரிலீசாக உள்ளது.
35
தியேட்டரில் ரிலீசாகும் பிறமொழி படங்கள்
மலையாளத்தில் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி கிறிஸ்டி என்கிற காதல் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இதில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மேத்யூ தாமஸ் நடித்திருக்கிறார். அதேபோல் இந்தியில் கார்த்திக் ஆர்யன் நடித்த ஷேஷாத் திரைப்படம் ரிலீசாக உள்ளது. ஆங்கிலத்தில் ஆண்ட்மேன் என்கிற திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
ஓடிடி-யை பொறுத்தவரை இந்த வாரம், சன்னிலியோன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆன ஓ மை கோஸ்ட் என்கிற காமெடி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் சன்னி லியோன் உடன் ஜிபி முத்து, சதீஷ், தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.
55
ஓடிடியில் ரிலீசாகும் பிறமொழி படங்கள்
மலையாளத்தில் மாளிகப்புரம் என்கிற திரைப்படம் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது. இந்தியில் சர்கஸ் படம் நெட்பிளிக்ஸிலும், லாஸ்ட் திரைப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடியிலும் ரிலீசாக உள்ளது. தெலுங்கில் பிரியா பவானி சங்கர் நடித்த கல்யாணம் கமநீகம் என்கிற திரைப்படமும் கலூடு என்கிற திரைப்படமும் ஆஹா ஓடிடியில் ரிலீசாக உள்ளன. கன்னடத்தில் அன்லாக்டு என்கிற திரைப்படம் நெட்பிளிக்ஸில் ரிலீசாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.