உடலோடு ஒட்டி இருக்கும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில்... 'தி லெஜண்ட்' ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு வந்த ஊர்வசி ரவுத்தலா!

First Published | Jul 23, 2022, 11:35 PM IST

உலகெங்கும் வரும் ஜூலை 28 அன்று வெளியாகும் 'தி லெஜண்ட்' திரைப்படம் தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
 

தமிழை தவிர, இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’. ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசித்து பார்க்கும் வகையில் இப்படம் எடுக்க பட்டுள்ளது.

கோடி கணக்கில் செலவு செய்து சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன. தனிப் பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜண்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். 

Tap to resize

தற்போது இந்த படத்தின் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழுவினர் தீவிரமாக பட புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

அந்த வகையில் இன்று, தெலுங்கு திரையுலகில் நடந்த புரொமோஷனின், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்த நிலையில், ஊர்வசி ரவுத்தலா அணிந்திருந்த ஆடை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உடலோடு ஒட்டியது போன்ற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் மின்னும் கற்கள் பாதித்தது போல் இந்த உடை டிசைன் செய்யப்பட்டிருந்தது. மேலும் இவரது புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Latest Videos

click me!