'நேர்கொண்ட பார்வை'யை தொடர்ந்து இயக்குனர் வினோத் மீண்டும் அஜித் குமாரை வைத்து இயக்கிய படம் வலிமை. 2 அரை வருட காத்திருப்பிற்கு பிறகு வெளியான வலிமை படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் அப்டேட்டுக்காக அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனபலரின் வாயிலை தட்டி விட்டனர் ரசிகர்கள்.
28
valimai
வெளியான சிங்கிள்ஸ் :
மாஸ் பீஜியமுடன் வெளியான முதல் சிங்கிள் நாங்க வேற மாறி மாஸ் ஹிட் கொடுத்ததை அடுத்து, அம்மா செண்டிமெண்ட் பாடல் முதலில் ப்ரோமோ பின்னர் பாடல் வெளியிடப்பட்டது. இந்த படலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். தனது அம்மாவின் நினைவாக எழுதியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
38
valimai
தெறிக்கவிட்ட ட்ரைலர் :
சிங்கிள்ஸை தொடர்ந்து வலிமையிலிருந்து ட்ரைலர் வெளியானது. இதில் தூள் பறக்கும் பைக்கர்ஸ் ஸ்டண்ட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதோடு மாஸ் பீஜியம் தெறிக்கவிட்டிருந்து.
48
valimai
அடுத்தடுத்து தள்ளிப்போன ரிலீஸ் :
2 அரை வருட காத்திருப்புக்கு பிறகு வெளியான அப்டேட்டுகளால் குஷியாக இருந்த ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது ரிலீஸ் ஒத்தி வைப்பு. கடந்த பொங்கல் பரிசாக படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் கொரோனா பரவலால் ரிலீஸ் தள்ளிப்போனது.
இதையடுத்து கடந்த 24-ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்தபடி தடபுடலாக வெளியானது. வலிமை ரிலீசுக்கு முன்னரே ப்ரீ புக்கிங் மூலம் பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆனது. படம் வெளியாகி மூன்று நாட்களில் 100 கோடியை வசூல் செய்து அசத்தியிருந்து.
68
valimai
வலிமை விமர்சனம் :
அஜித் ரசிகர்கள் தவிர மற்ற தரப்பில் மிதமான கமெண்ட்ஸுகளே கிடைத்து வருகிறது. அதிலும் விமர்சனம் என்கிற பெயரில் ப்ளூ சட்டை மாறன் அஜித்தை பங்கமாக கலாய்த்திருந்தார். இவரது விமர்சனத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
78
valimai
மூன்றாவது முறை இணையும் கூட்டணி :
வலிமை தொடர்ந்து அடுத்த படத்தில் மீண்டும் இந்த கூட்டணி கைகோர்க்கும் என போனிகபூர் அறிவித்தார். AK 61 என்கிற பெயரில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. அதோடு அஜித் லுக் குறித்த படங்கள் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இதையடுத்து அஜித் 62 - யை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல் பரவியது. இதற்கான அப்டேட் அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி வெளியாகும் என தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.