என்னது..பீஸ்ட் ஆடியோ லாஞ்ச் கிடையாதா ? தீயாய் பரவும் தகவலால் துக்கத்தில் விஜய் ரசிகர்கள்

Kanmani P   | Asianet News
Published : Mar 15, 2022, 08:09 PM IST

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறாது என தகவல்  கசிந்துள்ளதாக ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

PREV
18
என்னது..பீஸ்ட் ஆடியோ லாஞ்ச் கிடையாதா ? தீயாய் பரவும் தகவலால் துக்கத்தில் விஜய் ரசிகர்கள்
beast

மாஸ்டரை தொடர்ந்து பீஸ்ட் :

லோகேஷ் கனகராஜின் மாஸ்டரை தொடர்ந்து விஜய் இயக்குனர் நெல்சன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள படம் பீஸ்ட். முன்னதாக நெல்சன்..சிவகார்த்திகேயனின் டாக்டர், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார்.
 

28
actor vijay image in beast movie

விஜய்க்கு ஜோடியான பூஜா ஹெக்டே :

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார். மேலும் யோகிபாபு, விடிவி கணேஷ், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

38
beast

பீஸ்ட்  ரிலீஸ் : 

பீஸ்ட்  படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது.

48
beast first single

அரபிக் குத்து ப்ரோமோ :

இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ள இந்த படத்திலிருந்து முதல்  சிங்கிளாக அரபிக் குத்து பாடல் வெளியானது. இதன் ப்ரோமோ செம ஹிட் அடித்தது.

58
beast first single

ரீல்ஸில் கலக்கும் அரபிக் குத்து :

ஒரு பாடல் ஹிட் அடித்ததற்கு அர்த்தம்  அதிக ரீல்ஸ் செய்திருக்க வேண்டும் என்றாகி விட்டது. அந்த வகையில் அரபிக் குத்து மாஸ் காட்டி வந்தது. 

68
beast first single

இசை வெளியீட்டு விழா : 

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கியுள்ளதை தொடர்ந்து வருகிற மார்ச் 20-ந் தேதி சென்னையில் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

78
beast

ட்ரைலர் வெளியீடு :

வருகிற ஏப்ரல் 14-ம் தேதி படம் வெளியாகவுள்ளது. இதிலிருந்து முதல் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் மட்டுமே வெளியாகியுள்ளது. இதையடுத்து வருகிற ஏப்ரல் 2-ந் தேதி இப்படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

88
beast

இசை வெளியீடு ரத்து :

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் இசை வெளியீட்டு விழா நடக்கப்போவதில்லை என தகவல் பரவி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories