Published : Nov 24, 2025, 02:51 PM ISTUpdated : Nov 24, 2025, 03:10 PM IST
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் தர்மேந்திரா, தமிழ்நாட்டு மருமகன் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இப்படி அவரைப்பற்றிய பல அரிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் தர்மேந்திரா. இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பிரகாஷ் கௌரை மணந்தார். அப்போது அவருக்கு 19 வயது. பிரகாஷ் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருக்கிறார். இவர்களுக்கு சன்னி, பாபி, விஜேதா, அஜிதா என 4 குழந்தைகள் உள்ளனர். சினிமாவில் நுழைந்த பிறகு, தர்மேந்திரா பிரபல நடிகை ஹேமமாலினியை காதலித்தார். ஆனால், தர்மேந்திராவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்ததால், மதம்மாறி ஹேமமாலினியை திருமணம் செய்து கொண்டார். ஹேமமாலினி தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவரை மணந்ததன் மூலம் தமிழ்நாட்டு மருமகன் ஆனார் தர்மேந்திரா.
24
பாபி தியோலின் தந்தை தர்மேந்திரா
தர்மேந்திராவின் மூத்த மகன் சன்னி தியோல் ஒரு பிரபலமான நடிகர். அவரது இரண்டாவது மகனான பாபி தியோலும் ஒரு நடிகர் தான். இவர் தற்போது தமிழில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜன நாயகன் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவரின் மனைவி பெயர் தன்யா தியோல். இவர்களுக்கு ஆரியமான், தரம் என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். இதுதவிர தர்மேந்திராவின் மகள்கள் விஜேதா மற்றும் அஜிதா ஆகியோரும் திருமணமாகி செட்டிலாகிவிட்டனர்.
34
ஹேமமாலினியின் கணவர் தர்மேந்திரா
இதுவரை நாம் பார்த்தது தார்மேந்திராவின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகள் பற்ற். தற்போது அவரின் இரண்டாவது மனைவியான நடிகை ஹேமமாலினிக்கு பிறந்த ஈஷா தியோல் மற்றும் அஹானா தியோல் பற்றி பார்க்க உள்ளோம். இதில் நடிகை ஈஷா தியோல், பரத் தக்தானியை மணந்தார். ஆனால் 2024-ல் பிரிந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களை இருவரும் சேர்ந்து வளர்த்து வருகின்றனர். அஹானா தியோல் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருக்கிறார். இவர் 2014-ல் தொழிலதிபர் வைபவ் வோராவை மணந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் இரட்டை மகள்கள் என 3 குழந்தைகள் உள்ளனர்.
இப்படி இரண்டு மனைவிகளுடன் ஒரு பிக் பாஸ் ஃபேமிலியையே வழிநடத்தி வந்த தர்மேந்திரா, அடுத்த மாதம் தன்னுடைய 90-வது பிறந்தநாளை கொண்டாட இருந்தார். ஆனால் அதற்குள் அவர் உயிர் பிரிந்தது. தர்மேந்திராவின் மறைவால் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது. தர்மேந்திராவின் உடலுக்கு பாலிவுட் பிரபலங்கள் படையெடுத்து வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.