நாய்கள் கடித்தால் அதை பெரிய விஷயம் ஆக்கக்கூடாது என நடிகை நிவேதா பெத்துராஜ் கூறி இருந்த நிலையில், அவரை நெட்டிசன்கள் சரமாரியாக சாடி பதிவிட்டு வருகிறார்கள்.
நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது துபாயில் வசித்து வருகிறார். இவர் நேற்று சென்னையில் நடைபெற்ற தெருநாய்களுக்கான ஆதரவு பேரணியில் கலந்துகொண்டார். அதில் தெரு நாய்களை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு பின் பேசிய நடிகை நிவேதா பெத்துராஜ், நாய் கடித்தால் அதை பெரிய விஷயம் ஆக்கி பயத்தை உருவாக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தெரு நாய்களை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் அதற்காக தான் வாக்களித்துள்ளதாகவும் நிவேதா பெத்துராஜ் கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், தெரு நாய் கடித்து ரேபிஸ் பரவுவது மிகவும் ஆபத்தானது தான். அதற்காக அதை சொல்லி பயத்தை உருவாக்குவதற்கு பதிலாக அதற்கான தீர்வு என்ன என்பதை சொல்ல வேண்டும். அதேபோல் நாய்களுக்கு லைசன்ஸ் பெறுவதற்கு சென்னை மாநகராட்சி கட்டணம் வசூலிப்பதற்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் படு வைரலாகி வருவதோடு, கடும் விமர்சனத்திலும் சிக்கி உள்ளது. நிவேதா பெத்துராஜை நெட்டிசன்கள் சரமாரியாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
34
நிவேதாவை சாடும் நெட்டிசன்கள்
நிவேதா சொல்வதை போல் விலங்குகளுக்கு கருணை அவசியம், ஆனால் மக்களின் பாதுகாப்பு முதன்மை. நாய் கடித்தால் ‘பெரிய விஷயம் இல்லை’ என்று சொல்ல முடியாது, குழந்தைகளும் முதியவர்களும் ஆபத்தில் உள்ளார்கள். கருணையும் பாதுகாப்பும் இரண்டும் சேர்ந்து செல்ல வேண்டும் என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர் போட்டுள்ள பதிவில், “தெரு நாய்களை பாதுகாக்க வேண்டும் என்று சொல்லுகின்ற மக்கள் யாருன்னு பார்த்தா- தரையில் இறங்காமல் காரிலேயே போகும் Elite மக்கள் தான். தினமும் நடந்து செல்ல வேண்டி இருப்பவர்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும்” என குறிப்பிட்டுள்ளார்.
தெரு நாய்களுக்காக பரிதவிக்கும் நீங்கள், ஏன் பெரிய அளவில் ஆங்காங்கே தெரு நாய் பராமரிப்பு மையங்களை ஏற்படுத்தி, தெரு நாய்கள் கண்ணீர் வடிக்காமல், நோய் நொடி இன்றி சுகாதாரமான முறையிலும் மக்களுக்கு நாய்களால் தொல்லை வராமலும் பாதுகாகாக்கலாமே என ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்
மற்றொருவர் போட்டுள்ள பதிவில், ஒரு தடவையாவது நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துண்ட..? நீங்கள் சுயநலத்திற்கு நாய்களை வளர்ப்பது அது அண்டைவீட்டார் குழந்தைகளை பெரியவர்களை கடிப்பது கூட புரிந்து கொள்ள முடியாத மன நோயா..? சுயநலவாதிகளா..? நீங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்களை மலம் கழிக்க ரோடுகளிலும் நடைபாதைகளையும் நாறடிக்கும் அருவருப்பானவர்கள் என சாடி இருக்கிறார்.