பாலிவுட் திரையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்த நடிகர் தர்மேந்திரா, இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரின் மறைவு பாலிவுட் திரையுலகிற்கு மிகப்பெரிய பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா காலமானார். கடந்த மாதம் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் தர்மேந்திரா. இடையே அவர் மரணமடைந்ததாகவும் செய்திகள் வெளியானது. பின்னர் அவரது குடும்பத்தினர் அது வெறும் வதந்தி எனக் கூறினர். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
22
பவன் ஹான்ஸ் மயானத்தில் தர்மேந்திராவின் இறுதிச் சடங்கு
தர்மேந்திராவின் இறுதிச் சடங்கு வில்லே பார்லேயில் உள்ள மயானத்தில் நடைபெற்றது. ஏபிபி நியூஸ் அறிக்கையின்படி, தர்மேந்திராவின் மூத்த மகன் சன்னி தியோல் அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்தார். தர்மேந்திராவின் உடலை அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸில் மயானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு தர்மேந்திராவின் குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் பாலிவுட் சகாக்கள் மற்றும் நலம் விரும்பிகள் திரண்டிருந்தனர். ஹேமமாலினி மற்றும் அவரது மகள்கள் ஈஷா தியோல் மற்றும் அஹானா தியோல் மயானத்திற்கு வந்திருந்தனர், அதே நேரத்தில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் போன்ற பிரபலங்களும் காணப்பட்டனர்.