Kamalhaasan, AR Rahman
நடிகர் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ளார். அங்கு கடந்த ஜூலை 21-ந் தேதி நடைபெற்ற காமிக்கான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு தான் அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் கல்கி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கிறார் கமல்.
Kamalhaasan, AR Rahman
காமிக்கான் நிகழ்வுக்கு பின்னர் அமெரிக்காவில் தங்கி இந்தியன் 2 பட பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் கமல்ஹாசன். அதேபோல் இயக்குனர் ஷங்கரும் அங்குள்ள ஸ்டூடியோவில் இந்தியன் 2 படத்தில் இடம்பெறும் இளம் வயது கமல்ஹாசன், தொடர்பான காட்சிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... சிவாங்கிக்கு தான் கம்மி சம்பளம்... குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ
Kamalhaasan, AR Rahman
இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசனும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள ஆஸ்கர் மியூசியத்தை சுற்றிப்பார்த்துள்ளனர். அதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆஸ்கர் மியூசியத்தில் இருவரும் சேர்ந்து காட்ஃபாதர் திரைப்படத்தையும் கண்டு ரசித்துள்ளனர்.