வெளியானது முதல் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற மாமன்னன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக் குவித்தது. திரையரங்கில் சக்கைப்போடு போட்ட மாமன்னன் திரைப்படம் தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்துள்ளனர்.