Kalaga Thalaivan: உதயநிதி நடிப்பில் வெளியான 'கலகத் தலைவன்' படத்தின் முதல் நாள் வசூல்..! இத்தனை கோடியா?

First Published | Nov 19, 2022, 2:25 PM IST

நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கலகத் தலைவன்' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி நடிப்பில், கடந்த மே மாதம் வெளியான 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனத்துடன், வெற்றி பெற்ற நிலையில்... இந்த படத்தை தொடர்ந்து இதே வருடம் இவர் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படமான 'கலகத் தலைவன்' நேற்று உலகம் முழுவதும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.
 

இப்படம் நேற்று வெளியானதில் இருந்து தொடர்ந்து சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ரசிகர்களும் இந்த படத்தில், இதுவரை நடித்த படங்களை விட, உதயநிதியின் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில், முதல் நாளில் மட்டும் இப்படம் 2 முதல் 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Nithya Menon: திருமணத்திற்கு முன்பே நித்யா மேனன் கர்ப்பமா? புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அலறவிட்ட நடிகை!
 

Tap to resize

மேலும் அடுத்தடுத்து, விடுமுறை நாட்கள் வருவதால்... 'கலகத் தலைவன்' படத்தின் வசூல் கூடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் திரையரங்கு உரிமையாளர்கள். தொடர்ந்து தரமான படங்களை இயக்கி வரும் மகிழ் திருமேனி 'கலக தலைவன்' மூலம் மீண்டும் தன்னுடைய வெற்றியை உறுதி செய்துள்ளார். 

காதல், ஆக்ஷன், தில்லார், என படம் பார்ப்பவர்கள் மனைதை நிறைவு செய்கிறது 'கலகத் தலைவன்'. மேலும் நிதி அகர்வால் தன்னுடைய கதாபாத்திரத்தில் பொருந்தி நடித்துள்ளார். அதே போல், கலையரசன் மற்றும் ஆரவ் ஆகியோர் தங்களுடைய நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தி கைதட்டல்களை அள்ளியுள்ளனர். மொத்தத்தில் கலகத் தலைவன் திரையரங்குகளில் கலக்கி வருகிறார்.

அமீர் கான் மகளுக்கு மிக பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம்..! நேரில் கலந்து கொண்டு வாழ்த்திய அக்ஷரா ஹாசன்!

Latest Videos

click me!