மலையாள பைங்கிளியான நித்யா மேனன், தமிழில் நடிகர் நானி நடித்த 'வெப்பம்' திரைப்படம் மூலம் கோலிவுட் திரை உலகில் அறிமுகமானவர். இதை தொடர்ந்து, இவர் நடித்த 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, ரசிகர்கள் மனதில் நீக்காத இடம்பிடித்தார். குறிப்பாக தமிழில் இவர் கடைசியாக, இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில், தேன் மொழியாகவே மாறி நடித்திருந்தது விமர்சனம் ரீதியாக பல்வேறு பாராட்டுக்களை குவித்தது.