படம் நல்லா இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகாத நெஞ்சுக்கு நீதி.. முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?

Published : May 21, 2022, 04:01 PM IST

NenjuKu Needhi : நெஞ்சுக்கு நீதி படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவர் எம்.எல்.ஏ ஆன பிறகு ரிலீசாகும் முதல் படம் என்பதால் திமுகவினர் மத்தியில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

PREV
14
படம் நல்லா இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகாத நெஞ்சுக்கு நீதி.. முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?

கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் நெஞ்சுக்கு நீதி. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் மயில்சாமி, தன்யா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி ராஜசேகர், ஆரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

24

போனி கபூர் தயாரித்திருந்த இப்படம் இந்தியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஆர்ட்டிகிள் 15 என்கிற படத்தின் ரீமேக் ஆக உருவாகி இருந்தது. இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவர் எம்.எல்.ஏ ஆன பிறகு ரிலீசாகும் முதல் படம் என்பதால் திமுகவினர் மத்தியில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

34

படமும் வெளியானது முதல் விமர்சன நீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் திமுகவினர் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். ஒரு சில இடங்களில் இப்படத்தின் டிக்கெட்டுகள் இலவசமாகவும் வழங்கப்பட்டன.

44

இந்நிலையில், நெஞ்சுக்கு நீதி படத்தின் முதல் நாள் வசூல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் ரூ.1.30 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாளில் எதிர்பார்த்த வசூல் இல்லாவிட்டாலும் இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Mahaan : ஓடிடியில் செஞ்சுரி அடித்த மகான்! படக்குழுவுக்கு தடபுடலாக விருந்து வைத்த விக்ரம்- வைரலாகும் புகைப்படம்

click me!

Recommended Stories