வசூலில் முறைகேடு.. காத்துவாக்குல ரெண்டு காதல் ஓடிய திரையரங்கிற்கு 7 லட்சம் அபராதம்!

Kanmani P   | Asianet News
Published : May 21, 2022, 03:37 PM IST

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கை மிகக்குறைவாக காட்டியதாக திரையரங்கு ஒன்றில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
15
வசூலில் முறைகேடு.. காத்துவாக்குல ரெண்டு காதல் ஓடிய திரையரங்கிற்கு 7 லட்சம் அபராதம்!
KaathuvaakulaRenduKaadhal

விஜய் சேத்பதி, நயன்தாரா , சமந்தா நடித்த ' காத்து வாக்குல ரெண்டு காதல் ' படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. முக்கோண காதல் நாடகம் பாக்ஸ் ஆபிஸில் விஜய் சேதுபதியின் சிறந்த படமாக மாறியது மற்றும் பிளாக்பஸ்டர் வெற்றியாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் தமிழ்நாட்டில் ரூ 40 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும், படத்தின் மொத்த வசூல் ரூ 65 கோடி என்றும் கூறப்படுகிறது.

25
KaathuVaakula Rendu Kaadhal

இதற்கிடையே படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் குளறுபடி இருப்பதாக எண்ணிய இந்த படத்தின் விநியோகஸ்தர் பல்வேறு திரையரங்குகளில் படத்தின் வசூலை ஆய்வு செய்ததில், திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ டிக்கெட்டுகள் குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

35
KaathuVaakula Rendu Kaadhal

பின்னர் படத்தின் டிக்கெட் கணக்கை தவறாக சித்தரித்ததற்காக திருச்சியில் உள்ள தியேட்டருக்கு ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல  தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் படங்களுக்கான டிக்கெட் கணக்கை தவறாக சித்தரித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

45
kaathuvaakula renudu kaathal

முன்னதாக ரஜினிகாந்தின் 'அண்ணாத்தே' மற்றும் அஜித்தின் 'வலிமை' ஆகியவற்றிற்கும் போலி வசூல் நிலவரம் காட்டப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள்கூறியுள்ளனர். எனவே, அனைத்து திரையரங்குகளிலும் கம்ப்யூட்டர் டிக்கெட் வழங்கும் முறையை இணைத்தால் மட்டுமே இதுபோன்ற தவறுகளை தடுக்க முடியும் என தயாரிப்பாளர்கள் கருதுவதாக கூறப்படுகிறது. 

55
kaathu vaakula rendu kadhal

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, அனைத்து திரையரங்குகளையும் கணினி மூலம் இணைக்க வேண்டும் என்றும், இதனால் அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Read more Photos on
click me!

Recommended Stories