அந்தப் படம் வெளிவந்த சமயத்தில் உடலில் ஆபரேஷன் செய்துகொண்டு அதிக மருந்துகளை உட்கொண்டதால் உடல் எடையுடன் அஜித் காணப்பட்டுள்ளார். பின்னர் படத்தை பார்த்து விட்டு ஜெயம் ரவியை அழைத்த அஜித் குமார் எவ்வாறு உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துள்ளீர்கள் என கேட்டுள்ளார். பின்னர் அஜித்துக்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி உள்ளிட்ட அட்வைஸ்களை இளம் நடிகரான ஜெயம் ரவி கூற அதை ஏற்றுக்கொண்ட அஜித் தனது உடல்நிலையை பழையபடி மாற்றியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.