கேஜிஎப் 3 தாமதத்திற்கு இதுதான் காரணமா? 20 ஆண்டுகளாக கதையை இயக்கும் கேஜிஎப் இயக்குநர்

First Published May 21, 2022, 2:18 PM IST

கேஜிஎப் இயக்குனர் இயக்கும் NTR 31 படத்தின் முதல் லுக் போஸ்டரை பிரசாந்த் நீல் வெளியிட்டுள்ளார்.

kgf 2

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி கொடியை நாட்டியது. ஒற்றை தாயின் மகிழ்விக்கு சிறு பிள்ளை படும் பாட்டிலிருந்து மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை அவன் பிடிக்கும் சாதனை என மிரளவைத்திருந்த இந்த படம் அப்போதே இதன் இரண்டாம் பாகத்திற்கான வித்திட்டு விட்டது.இதையடுத்து இரண்டாம் பாகம் கடந்த 4 ஆண்டுகளாக உருவானதை அடுத்து சமீபத்தில் திரைக்கண்டது.

kgf 2

கடந்த மாதம் வெளியான இந்த படத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவானது. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி , ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், சரண், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தன. யாஷின் அனல் பறக்கும் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது. இரண்டாம் பாகத்தில்  பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத் அதீரா கதாபாத்திரத்தை வந்து மிரட்டி  இருந்தனர். 

kgf 2

உலக ரசிகர்களை கவர்ந்த கேஜிஎப் 2 இதுவரை கிட்டத்தட்ட 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றி காரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றி கொண்டாட்டத்திற்கு பிறகு மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

kgf 2

இந்த பாகத்தில் சூப்பர் வில்லங்களாக நடிக்க ஹாலிவுட் நாயகர்களிடம்  கேஜிஎப் குழு பேசி வருவதாகவும், பாகுபலி வில்லன் ராணா டகபதியுடன்தயாரிப்பாளர்கள்பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அதோடு இந்த பாகம் முந்தைய இரண்டாம் பாகத்தை போல் அல்லாமல் அடுத்த வருடமே வெளியாகும் என பேசப்பட்டது. இந்த தகவலை மறுத்துள்ள இயக்குனர் பிரசாந்த் நீல் மறுத்திருந்தார். படம் இப்போதைக்கு ஆரம்பிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

kgf 2

இதற்கிடையே கேஜிஎப் இயக்குனர் சமீபத்தில் வெளியான ஆர்ஆர் ஆர் பட நாயகன் என்டிஆரின் 31 வது படத்தை பிரமாண்டமாக உருவாக்கும் முயற்சியில் தற்போது உள்ளார்.  NTR 31 படத்தின் முதல் லுக் நாயகனின் பிறந்த நாள் பரிசாக வெளியிட்டப்பட்டது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

NTR 31

படம் குறித்து பேசிய இயக்குனர்  இந்த கதை என் மனதில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. ஆனால் அப்போது அதன் பிரம்மாண்டத்தை எண்ணி பயந்தேன். ஆனால் இப்போது என்னுடைய கனவு படைப்பை கனவு நாயகனோடு உருவாக்குவதற்கான காலம் அமைந்துள்ளது" எனக் கூறியுள்ளார்.

click me!