கேன்ஸ் விழாவில் பீஸ்ட் நாயகி அணிந்து வந்த செருப்பு விலை இத்தனை லட்சமா?- அந்த காசுல ஒரு சொகுசு காரே வாங்கிடலாமே

Published : May 21, 2022, 01:52 PM IST

Pooja Hegde : பிரான்ஸில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை பூஜா ஹெக்டே முதன்முறையாக கலந்துகொண்டார்.

PREV
14
கேன்ஸ் விழாவில் பீஸ்ட் நாயகி அணிந்து வந்த செருப்பு விலை இத்தனை லட்சமா?- அந்த காசுல ஒரு சொகுசு காரே வாங்கிடலாமே

மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படம் தோல்வியை தழுவியதால் கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு டோலிவுட் பக்கம் சென்ற பூஜா ஹெக்டே, அங்கு அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார்.

24

டோலிவுட்டில் அவருக்கு மவுசு அதிகரித்ததை அடுத்து, அவரை நோக்கி கோலிவுட் பட வாய்ப்புகள் தேடி வர விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் பூஜா ஹெக்டே. இதுதவிர தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

34

இந்நிலையில், பிரான்ஸில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை பூஜா ஹெக்டே முதன்முறையாக கலந்துகொண்டுள்ளார். அங்கு சிவப்பு கம்பள வரவேற்பில் கவர்ச்சி உடையில் கலந்துகொண்ட அவர், திரைப்பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், அவர் அணிந்திருந்த செருப்பின் விலை அறிந்து நெட்டிசன்கள் தலைசுற்றிப் போய் உள்ளனர்.

44

அதன்படி பூஜா ஹெக்டே அணிந்திருந்த கருப்பு நிற ஹீல்ஸ் செருப்பு ரூ.43 லட்சம் மதிப்புடையது என கூறப்படுகிறது. இதைக் கேட்டு ஷாக் ஆன நெட்டிசன்கள் சொகுசு கார் விலையில் செருப்பா என ஷாக் ஆகி உள்ளனர். சிலரோ 43 லட்சம் ரூபாய்க்கு அந்த செருப்பில் அப்படி என்ன தான் இருக்கு என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவர் அணிந்திருந்த ஆடைகளும் லட்சக்கணக்கிலான மதிப்புடையது என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... Vani Bhojan : கணவனை கழட்டிவிட்டு விக்ரமுடன் ரொமான்ஸ் பண்ணிய வாணி போஜன்... வைரலாகும் 7 நிமிட வீடியோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories