அஜித்தை முதல்முறையாக 'தல'- னு கூப்பிட்டவர் யார் தெரியுமா? 20 ஆண்டுக்கு பிறகு ஏகே 61-ல் இணைந்த பிரபலம்

Kanmani P   | Asianet News
Published : May 21, 2022, 01:16 PM IST

அஜித் தற்போது நடித்து வரும் 61 வது படம் குறித்த தகவல் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளது. அதன்படி தற்போது இந்த படத்தில் இணைந்துள்ள பிரபலம் குறித்த தகவல் கசிந்துள்ளது. 

PREV
15
அஜித்தை முதல்முறையாக 'தல'- னு கூப்பிட்டவர் யார் தெரியுமா? 20 ஆண்டுக்கு பிறகு ஏகே 61-ல் இணைந்த பிரபலம்
valimai

வலிமை வெற்றி :

நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் மீண்டும் இயக்கிய வலிமை திரைப்படம். ரசிகர்களை வெகுவாக பாராட்டப்பட்டது. ஆனால் விமர்சகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பை பெறவில்லை. வசூலும் குறைவுதான். இதில் காலா பட ஹிமா குரேஷி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். செண்டிமெண்ட் கலந்த ஆக்சன் படமான இதை இரண்டாவது முறையாக போனி கபூர் தயாரித்திருந்தார்.

25
AK 61

மீண்டும் அதே கூட்டணி :

வலிமை வெற்றியை தொடர்ந்து முன்றாவது முறையாக அதே கூட்டணியில் தற்போது அஜித் 61 வது படம் உருவாகி வருகிறது. மீண்டும் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் கூட்டணியில் உருவாகி வரும் AK 61 படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது.

35
AK 61

கல்லூரிப் பேராசிரியராக அஜித் :

நேர்கொண்ட பார்வையில் வக்கீலாகவும், வலிமையில் போலீசாகவும் வரும் அஜித் இந்த படத்தில் கல்லூரிப் பேராசிரியராக அஜித் நடிக்கவுள்ளாராம். வங்கிக்கொள்ளை மையமாக வைத்து உருவாகிவரும்  இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நிரவ் ஷா இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இதில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

45
AK61

தீபாவளி ரிலீஸ் :

இந்த படத்தை அடித்து அஜித் விக்னேஷ் சிவனுடன் 62 வது படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதோடு 63,64 வது படத்திற்கான கதையும் ரெடியாக உள்ளது. இதன் பொருட்டு அஜித் தற்போது நடித்து வரும் 61 வது படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் தற்போது முடிவடைந்துள்ளதையடுத்து, இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகளையும் வேகமாக நடத்தி முடித்து விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்க உள்ளதாம். மேலும், இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

55
Mahanadi Shankar

ஏகே 61 -ல் மகாநதி சங்கர் :

இந்த படத்தின் புதிய அப்டேட்டாக ஏகே 61 வது படத்தில் மகாநதி சங்கர் இணைந்துள்ளனராம். இவர் ஏற்கனவே தீனா படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். மகாநதி சங்கர் தான் முதல் முதலில் அஜித்குமாரை 'தல' என்று அழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!

Recommended Stories