நடிகர் அஜித் நடிப்பில் தற்போது ஏ.கே.61 திரைப்படம் தயாராகி வருகிறது. எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக சார்பட்டா பரம்பரை பட நடிகர் ஜான் கொகேன் நடித்து வருகிறார்.