இசையமைப்பாளர் டி இமான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த வாரம் எமிலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் டி.இமான். விவாகரத்து செய்த ஆறே மாதத்தில் மறுமணம் செய்துகொண்ட இமானை அவரது மாஜி மனைவி மோனிகா டுவிட்டரில் கடுமையாக சாடினார்.
இதையடுத்து 2-வது திருமணம் குறித்து பதிவிட்டிருந்த இமான், கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பம் சந்தித்து வந்த இன்னல்களுக்கு தீர்வு காணும் விதமாக தனது மறுமணம் அமைந்ததாகவும், எமிலியின் மகள் நேத்ராவை தனது மூன்றாவது மகளாக ஏற்றுக்கொள்வதாகவும், அதே வேளையில் தனது மகள்களை மிஸ் பண்ணுவதாகவும், அவர்களுக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் உருக்கமாக பதிவிட்டிருந்தார். மேலும் எமிலியின் பெரிய குடும்பத்தில் தன்னை சேர்த்துக்கொண்டதற்காக நன்றியும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டி இமானின் இந்த பதிவை விமர்சிக்கும் விதமாக அவரின் மாஜி மனைவி மோனிகா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நாயோடு ஒப்பிட்டு அவர் அந்த பதிவை போட்டுள்ளார். அதன்படி கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பம் சந்தித்து வந்த இன்னல்களுக்கு தீர்வு காணும் விதமாக இந்த நாய்களின் வருகை அமைந்ததாகவும், இந்த இரண்டு நாய்களையும் தனது மூன்றாவது மற்றும் நான்காவது மகள்களாக ஏற்றுக்கொள்வதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.