கையில் துப்பாக்கியுடன் அதர்வா.. தீப்பிடிக்கும் போஸ்டரை வெளியிட்ட பிரபலம். படம் எப்ப ரிலீஸ் தெரியுமா?

Published : Aug 04, 2022, 04:38 PM IST

ட்ரிக்கர் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள படத்தின் போஸ்டரை நடிகர் உதயநிதி வெளியிட்டுள்ளார்.

PREV
15
கையில் துப்பாக்கியுடன் அதர்வா.. தீப்பிடிக்கும் போஸ்டரை வெளியிட்ட பிரபலம். படம் எப்ப ரிலீஸ் தெரியுமா?
Atharva

தமிழ் சினிமாவில் நடிகர்கள் குறித்த பார்வையை மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் மறைந்த நடிகர் முரளி இவரின் மகனான அதர்வா பானா காத்தாடி படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார்.. இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான பானா காத்தாடி படத்தை பத்ரி வெங்கடேஷ் என்பவர் எழுதி இயக்கி இருந்தார். படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருந்தது. ஆனால் மகனின் முதல் படம் திரைக்கு வரும் முன்னரே முரளி காலமாகிவிட்டார். 

25
Atharva

பானா காத்தாடி படத்தை அடுத்து மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு அதர்வாவின் பரதேசி படம் வெளியானது. மாறுபட்ட இயக்கத்திற்கு பெயர் போன பாலா இந்த படத்தை இயக்கியிருந்தார். முந்தைய படத்தில் சிறுவனாக தோன்றிய அதர்வா இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இதை அடுத்து பல வருட இடைவெளிக்கு பிறகு கடந்த 2012 ஆம் ஆண்டு எப்பொழுதும் உன் கற்பனையில் என்னும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியில் பாராட்டுகளை பெற்றது. முன்னதாக இவர் நடிப்பில் வெளியான பரதேசி படத்திற்கு தமிழில் சிறந்த நடிகருக்கான  ஃபிலிம் பேர் விருது கிடைத்தது.

மேலும் செய்திகளுக்கு..priyanka chopra : பார்க்கில் மகளுடன் பிரியங்கா சோப்ரா..கவர்ச்சி உடையில் கலக்கல் போட்டோஸ்..

 

35
Atharva

பின்னர் இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும் அவையெல்லாம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை. கடந்தாண்டு அதர்வா தள்ளி போகாதே என்னும் படத்தில் நடித்திருந்தார். இதை அடுத்து குருதியாட்டம், முகவரி, தூண்டுதல், ஒத்தைக்கு ஒத்த, நிறங்கள் மூன்று, ருக்மணி வண்டி வருது. உள்ளிட்ட படங்களில்  தற்போது நடித்து வருகிறார். இதில் குருதி ஆட்டம்  நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ளது. இந்த படம் குறித்தான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்தது.

மேலும் செய்திகளுக்கு..பிறந்தநாளில் யாஷிகா ஆனந்த் யாரை சந்தித்துள்ளார் தெரியுமா? வைரலாகும் பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோஸ்

45
Atharva

 இந்நிலையில் அதர்வா நடித்த ட்ரிக்கர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகிவிட்டது. இவரின் முந்தைய படமான 100 படத்தை இயக்கிய ஷாம் ஆண்டனி இரண்டாவது முறையாக அதர்வாவின் ட்ரிக்கர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இவர்களுடன் அருண்பாண்டியன், சீதா, முனிஸ்கான், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு.. கமல்ஹாசன் - சிம்பு இணையும் திரைப்படம்..! இயக்குனர் யார்? தீயாய் பரவும் தகவல்!

55
Trigger

ஜிப்ரான் இசையமைத்துள்ள  இந்த படத்தை பிரமோத் ஃபிலிம் சார்பில் சுருதி நல்லப்பா தயாரித்துள்ளார் தமிழக வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. தற்போது இறுதி கட்ட தயாரிப்பில் உள்ள ட்ரிக்கர் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள படத்தின் போஸ்டரை நடிகர் உதயநிதி வெளியிட்டுள்ளார். இதில்  தீப்பிடித்து உள்ள போஸ்டருக்கு இடையே துப்பாக்கியுடன் அதர்வா மிரட்டுகிறார். இது படம் குறித்தான எதிர்பார்ப்பை எதிர் செய்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories