இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், தமிழகத்தில் மட்டும் சுமார் 600 திரையரங்குகளில் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் 'மாமன்னன்'.
இவர் பேசியது சில சர்ச்சைகளுக்கு வித்திட, 'மாமன்னன்' படத்தை தடை செய்ய வேண்டும் என சிலர் நீதி மன்றம் வரை சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் மாரி செல்வராஜுக்கு ஆதரவாகவும் பலர் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். நீதி மன்றமும் இப்படத்திற்கு தடை விதிக்ககூறிய வழக்கை விசாரணை செய்து, தள்ளுபடி செய்தது. மேலும் ஒரு சில திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான 'மாமன்னன்' படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'மாமன்னன்' படத்தை ரசிகர்களுடன் பார்த்த உதயநிதி, செய்தியாளர்களிடம் பேசும் போது, மாமன்னன் திரைப்படம் என்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்துவிட்டது. எனவே இனி நான் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பில்லை என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார்.