பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் களமிறங்கும் 'ஹார்ட் பீட்' பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?

Published : Sep 26, 2025, 05:19 PM IST

Heart Beart 2 Padine Kumar : ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும், ஹார்ட் பீட் தொடரில் நடிக்கும் இரண்டு பிரபலங்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

PREV
15
பிக்பாஸ் சீசன் 9:

ஒவ்வொரு வருடமும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 8 சீசன் முடிவடைந்துள்ள நிலையில், 9-ஆவது சீசன் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க உள்ளார்.

மாரி குறித்து கார்த்திக்கு தெரியவரும் தகவல்.. நடந்தது என்ன? - கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

25
பிக்பாஸ் போட்டியாளர்கள்:

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய பேச்சு அடிப்பட துவங்கிய மறுகணமே... இந்த முறை யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழ துவங்கிவிட்டது. அதே போல் பல பிரபலங்களின் பெயர்கள் பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் உத்தேச பட்டியலில் உள்ளது.

சூர்யாவின் கருப்பு படம் எப்படி இருக்கும்: முதல் விமர்சனத்தை பயமே இல்லாமல் புட்டு புட்டு வைத்த நடிகர்!

35
உத்தேச லிஸ்ட்:

குறிப்பாக சீரியல் நடிகை ஜனனி, பாரதி கண்ணம்மா ஃபரினா ஆசாத், நடிகர் சித்து, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பட்டி மன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் உட்பட சில பிரபலங்கள் பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. இவங்களை தொடர்ந்து இந்த லிஸ்டில், இரண்டு புதிய பிரபலங்களின் பெயர் இணைந்துள்ளது.

45
ஹார்ட் பீட்:

ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில், ஒவ்வொரு புதன் கிழமையும் 4 எபிசோடுகள் வீதம் ஒளிபரப்பாகி வரும், முக்கிய வெப் தொடர் தான் ஹார்ட் பீட். இளம் மருத்துவர்களை சுற்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேப்பை தொடர்ந்து, இந்த தொடரின் இரண்டாவது பாகம் சமீபத்தில் துவங்கியது. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடரில் நடித்து வரும் இரண்டு பிரபலங்கள் தான் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளனர்.

55
யார் அந்த 2 போட்டியாளர்கள்?

அதாவது, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய ரோலில் நடித்து வந்த பாடினி (அனிதா) கிட்ட தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. அதே போல் கார்த்திக்குமாரின் (விஜய்) சிறு வயது காதாபாத்திரத்தில் நடித்த ரோஷனும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளாராம். பிக்பாஸ் துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வித்தியாசமான புரோமோக்களை வெளியிட்டு நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பையும் கூடி வருகிறது விஜய் டிவி.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories