இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், சிவனாண்டி மற்றும் முத்துவேல் இணைந்து ரேவதிக்கு ரத்தம் கிடைக்க கூடாது என திட்டமிட்டு மாரியை கடத்திய நிலையில், மருத்துவமனையில் ரேவதியின் உடல்நிலை மேலும் மோசமடைகிறது. இதனால் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைகிறார்கள். ரேவதி உடல்நிலை நலம்பெற வேண்டு என்பதற்காக ஆசிரமத்தில் அன்னதானம் செய்ய முடிவு செய்கிறார்கள்.