தமிழக அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார் எச். ராஜா. பாஜகவின் தேசிய செயலாளராக இருந்த அவர் அந்தக் கட்சியில் பெரிய பதவிகளில் இல்லை. ஆனாலும், அரசியலில் தொடர்ந்து இயங்கிய எச். ராஜா, பின்னர் சினிமாவில் நடிகராக அறிமுகமாக உள்ளார். ‘கந்தன் மலை’ படத்தில் அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் கடந்த மாதத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.