வைரல் யூடியுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன்“ என்கிற திரைப்படத்தை செல்அம் எழுதி இயக்குகிறார். இப்படத்தை தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் cosmetologist டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணைந்து தயாரிக்கின்றனர்.
25
manjal veeran
2K கிட்ஸின் மனம் கவர்ந்தவரான பிரபல வைரல் யூடியுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர். நடிகர் கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் புதிய அவதாரம் எடுக்க உள்ளார்
35
manjal veeran
இப்படத்திற்கு கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீதர் மாஸ்டர் தான் நடனம் அமைக்கிறார். கதாநாயகி, மற்றும் டிடிஎப் வாசன் உடன் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி செல்அம் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே திரு.வி.க.பூங்கா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் ஜன ரஞ்சகமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது மஞ்சள் வீரன்.
55
manjal veeran
ஜூலை மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. TTF வாசனின் பிறந்தநாளான நேற்று “மஞ்சள் வீரன் “ திரைப்படத்தின் பூஜையும் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடும் நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்களும் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.