அம்புலி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. இதையடுத்து மாயை, விலாசம், கதம் கதம், வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, டிக்கெட், ஊமை செந்நாய் போன்ற படங்களில் நடித்த சனம் ஷெட்டிக்கு, சினிமாவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் சனம் ஷெட்டி.