பிகினி ரேஞ்சுக்கு படுகவர்ச்சியான உடையணிந்தபடி குட்டி நயன் அனிகா பகிர்ந்த டூமச் கிளாமர் போட்டோஸ் வைரல்

First Published | Jun 30, 2023, 9:11 AM IST

ரசிகர்களால் குட்டி நயன் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை அனிகா சுரேந்திரனின் கவர்ச்சி போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

anikha surendran

மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகாவை தமிழ் திரையுலகிற்கு அழைத்து வந்தது கவுதம் மேனன் தான். அவர் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார் அனிகா. முதல் படத்திலேயே அஜித்துக்கு மகளாக நடித்த இவர்,  யார்ரா இந்த பொண்ணு என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். அப்படத்துக்கு பின்னர் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகளும் குவிந்தன.

anikha surendran

இதையடுத்து நானும் ரெளடி தான் படத்தில் நடிகை நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரமாக நடித்த அனிகா அதன்பின் சிவா இயக்கிய விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். இதனால் ரசிகர்கள் அவரை செல்லமாக குட்டி நயன் என அழைக்கத் தொடங்கினர். பின்னர் மாமனிதன், மிருதன் போன்ற படங்களில் நடித்த அனிகா, 18 வயதை கடந்ததும் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார். இவரை ஹீரோயினாக்கியது தெலுங்கு சினிமா தான்.

இதையும் படியுங்கள்... மாஸ் ஓப்பனிங்... கடைசி படத்தில் கல்லாகட்டிய உதயநிதி! மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?

Tap to resize

anikha surendran

தெலுங்கில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த புட்ட பொம்மா என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கினார் அனிகா. இது கப்பேலா என்கிற மலையாள படத்தின் ரீமேக் ஆகும். பின்னர் மலையாளத்தில் அல்ஃப்ரெட் டி சாமுவேல் இயக்கத்தில் வெளியான ஓ மை டார்லிங் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் அனிகா. இப்படத்தில் அவர் லிப்லாக் சீன், படுக்கையறை காட்சிகளில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

anikha surendran

ஹீரோயின் ஆனதுமே நடிகைகள் பாலோ பண்ணும் வழக்கமான பார்முலாவை தான் அனிகாவும் பின்பற்றி வருகிறார். சமீப காலமாக இவர் கவர்ச்சி தூக்கலாக போட்டோஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது மாலத்தீவில் வெள்ளை நிற கவர்ச்சி உடையணிந்தபடி எடுத்த செல்பி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அனிகா. அவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

Latest Videos

click me!