எனக்கு அல்வா கொடுத்துட்டு... தொழிலதிபருடன் ரூமுக்கு போயிடுச்சு - பயில்வானுக்கே பயம் காட்டிய நடிகை

First Published | Jun 30, 2023, 10:58 AM IST

சினிமா நடிகைகள் குறித்து அந்தரங்க விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தும் பயில்வான் ரங்கநாதன், தற்போது தனக்கு அல்வா கொடுக்க நினைத்த நடிகை பற்றி பேசி இருக்கிறார்.

bayilvan

சினிமா பத்திரிகையாளரும், தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக நடித்து பிரபலமானவருமான பயில்வான், சமீபகாலமாக யூடியூப்பில் சினிமா நடிகர், நடிகைகள் குறித்து அந்தரங்க விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தொழிலதிபருடன் உல்லாசமாக இருந்த நடிகை தனக்கு அல்வா கொடுக்க நினைத்த சம்பவம் பற்றி மனம்திறந்து பேசி இருக்கிறார் பயில்வான்.

bayilvan

அவர் பேசியதாவது : “திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் என்கிற கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் நடைபெறும். அந்த விழாவை பிரபல பீடி நிறுவனம் தான் நடத்தும். அந்த பீடி நிறுவன உரிமையாளரின் மகன் என்னை அழைத்து, இரண்டு திருவிழாவாக நடத்த உள்ளதாக கூறினார். அதில் முதல் திருவிழாவுக்கு எஸ்.வி.சேகர் நாடகம் வேண்டும் என்றும், அடுத்த திருவிழாவுக்கு கவர்ச்சி நடிகை நடனமாட அழைத்து வருமாறு கூறினார்.

Tap to resize

bayilvan

இதற்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்து, முதல் நாள் எஸ்.வி.சேகர் நாடகம் சிறப்பாக நடைபெற்றது. இரண்டாவது நாள் எனக்கு சென்னையில் ஷூட்டிங்கிற்கு வர சொல்லி அழைப்பு வந்துவிட்டது. இதனால் நடனமாட வந்த கவர்ச்சி நடிகையிடம் போய் சொல்வதற்காக மதியம் அவரது ரூமுக்கு சென்று பார்க்கும் போது அந்த நடிகை நன்கு குடித்துவிட்டு போதையில் இருந்தார். அவரிடம் 7 மணிக்கு டான்ஸ் ஆட போகச் சொல்லி அட்வான்ஸ் 10 ஆயிரம் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டேன்.

இதையும் படியுங்கள்... அந்த இடத்தில் ஷேவ் பண்ணிவிடுவது யார்? நெட்டிசனின் எடக்குமுடக்கான கேள்விக்கு சனம் ஷெட்டி அளித்த செருப்படி பதில்

bayilvan

மீதி பணத்தை சென்னையில் வந்து வாங்கிக்கோ என சொன்னேன். ஆனால் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த நடிகை ஒரு தொழிலதிபருடன் இரவு ரூமுக்கு சென்றுவிட்டார். நடனம் ஆட செல்லாததால் கொடுத்த அட்வான்ஸை திருப்பி கேட்டும் அவர் தர மறுத்துவிட்டார். அந்த சமயத்தில் அந்த நடிகை அதிமுகவின் பிரச்சார பீரங்கியாகவும் திகழ்ந்து வந்தார். எல்லா அதிமுக கூட்டங்களுக்கும் சென்றும் 25 ஆயிரம் வாங்கிவிட்டு பேசி வருவார்.

bayilvan

அந்த கவர்ச்சி நடிகைக்கு சொந்தமான பங்களாவில் அதிமுக நிர்வாகி ஒருவர் வாடகைக்கு இருந்தார். இந்த தகவல் கிடைத்ததும், அந்த நபரை சந்தித்து இந்த அட்வான்ஸை வாங்கித் தருமாறு கேட்டேன். அவர் அவ்ளோதான நான் வாங்கி தருகிறேன் என கூறி சொன்னபடியே பணத்தையும் வாங்கி கொடுத்துவிட்டார். அவர் மட்டும் உதவவில்லை என்றால் அந்த 10 ஆயிரம் ரூபாய் என் தலையில் விழுந்திருக்கும். அல்வா கொடுப்பதில் கெட்டிக்காரியான அந்த நடிகை எனக்கே அல்வா கொடுக்க பார்த்தார்” என பயில்வான் அந்த வீடியோவில் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... பிகினி ரேஞ்சுக்கு படுகவர்ச்சியான உடையணிந்தபடி குட்டி நயன் அனிகா பகிர்ந்த டூமச் கிளாமர் போட்டோஸ் வைரல்

Latest Videos

click me!