Trisha Marriage: சவுத் குயின் த்ரிஷாவுக்கு தயாரிப்பாளருடன் திருமணம்! யார் அந்த பிரபலம்? தீயாக பரவும் தகவல்!

Published : Sep 19, 2023, 10:25 PM IST

சவுத் குயின் என ரசிகர்களால் அழைக்கப்படும் திரிஷா 40 வயதை எட்டிய பிறகும், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் உள்ள நிலையில், இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.  

PREV
16
Trisha Marriage: சவுத் குயின் த்ரிஷாவுக்கு தயாரிப்பாளருடன் திருமணம்! யார் அந்த பிரபலம்? தீயாக பரவும் தகவல்!
Actress Trisha:

தமிழ் திரையுலகில் கிட்ட தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக மட்டுமே நடித்து வரும் நடிகைகளில், நயன்தாராவுக்கு நிகரான இடத்தை பிடித்துள்ளவர் த்ரிஷா. இவர்கள் இருவருமே நிஜத்தில் தோழிகள் என்றாலும் திரையுலகை பொறுத்தவரை போட்டியாளர்களாகவே பார்க்க படுகிறார்கள்.

26
Trisha Vs Nayanthara

நயன்தாரா, தன்னுடைய நீண்ட நாள் காதலரான... விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு, வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்று கொண்டு, கணவர் குழந்தைகள் என வாழ்க்கையை அனுபவித்து கொண்டே... மற்றொருபுறம், சினிமா, நடிப்பு, தயாரிப்பு, லிப் பாம் கம்பெனி, ஸ்கின் கேர் நிறுவனம், ரியல் எஸ்டேட் என கலந்து கட்டி பல பிசினஸ்களை செய்து வருகிறார்.

காப்பி சர்ச்சையில் சிக்கிய ஜெயம் ரவியின் 'பிரதர்' ஃபர்ஸ்ட் லுக்! அப்படியே இருக்கே.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

36
Trisha Business:

திரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வந்தாலும், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் மூலம் கல்லா கட்டி வருகிறார். 

46
Trisha Comeback to Ponniyin selvan:

சில வருடங்களாக சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் திரையுலகில் சரிவை சந்தித்து வந்த த்ரிஷாவுக்கு, பொன்னியின் செல்வன் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. எனவே அடுத்தடுத்து விஜய்யுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி, என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட துவங்கியுள்ளார். சம்பளத்தையும் தாறுமாறாக ஏற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

மகளை இழந்து வாடும் விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு... அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்! போட்டோஸ்

56
Trisha marriage:

இந்நிலையில் த்ரிஷாவின் திருமணம் குறித்து வெளியாகியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. அதாவது த்ரிஷாவுக்கும், மலையாள திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

66
Trisha marriage News Reel or Real

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர், தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், பின்னர் திருமணம் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே த்ரிஷாவின் திருமணம் குறித்து பல வதந்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தகவல் உண்மையா? அல்லது வழக்கம் போல் வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய் ஆண்டனி மகள் தற்கொலை!! தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்!
 

Read more Photos on
click me!

Recommended Stories